Tuesday, April 10, 2018

டார்ஜிலிங், மணாலி, காஷ்மீருக்கு ஐ.ஆர்.சி.டி.சி., சிறப்பு சுற்றுலா

Added : ஏப் 09, 2018 20:58

சென்னை: டார்ஜிலிங், குலு, மணாலி மற்றும் காஷ்மீருக்கு, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., சிறப்பு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து, பாலக்காடு, ஈரோடு, சேலம், சென்னை மற்றும் விஜயவாடா வழியாக, மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங், சிக்கிம் மாநில தலைநகர், கேங்டாக் மற்றும் அங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று வர, 12 நாள் சுற்றுலா அறிவிக்கப்பட்டுள்ளது.  மே, 18ல் துவங்கும் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 46 ஆயிரத்து, 200 ரூபாய் கட்டணம் சென்னை, கோவை மற்றும் கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து, காஷ்மீர், குலு மற்றும் மணாலிக்கு, மே, 2ல், விமானம் மற்றும் ரயிலில் செல்லும் வகையில், 12 நாள் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  சென்னை, கோவை மற்றும் கொச்சியில் இருந்து, டில்லிக்கு விமானத்தில் செல்லலாம். அங்கிருந்து, ரயிலில், ஆக்ரா, அமிர்தசரஸ், காஷ்மீர், குல்மார்க், சோன்மார்க் சென்று வரலாம். ஒருவருக்கு, 42 ஆயிரத்து, 800 ரூபாய் கட்டணம் டில்லியில் இருந்து, ஆக்ரா, அமிர்தசரஸ், குலு, மணாலி, மணிகரன் மற்றும் சண்டிகர் சென்று வரும், 12 நாள் சுற்றுலாவிற்கு, ஒருவருக்கு, 43 ஆயிரத்து, 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.மேலும் தகவல்களுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் சென்னை அலுவலகம், 98409 02919; மதுரை அலுவலகம், 98409 02915 மற்றும் கோவை அலுவலகத்தை, 90031 40655 என்ற, மொபைல்போன் எண்களில், தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024