Wednesday, April 18, 2018

"வழக்கு முடியும்வரை வரக்கூடாது" கணபதிக்கு கெட்அவுட் சொன்ன பாரதியார் பல்கலைக்கழகம்! 

இரா. குருபிரசாத்
தி.விஜய்
Coimbatore:

லஞ்ச ஒழிப்புப் புகாரில் கைது செய்யப்பட்ட கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை, துணைவேந்தர் பங்களாவில் இருந்து காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

உதவிப் பேராசிரியர் பணிக்கு லஞ்சம் பெற்ற குற்றத்துக்காக லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். ஆனால், துணைவேந்தர் பொறுப்பில் இருந்து கணபதி முழுமையாக நீக்கம் செய்யப்படாததால், அவர் பழைய அதிகாரத்துடனேயே வலம் வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான துணைவேந்தர் பங்களாவில் இருக்கும் அவரை, பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ரகசிய சந்திப்பு நடத்தி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், பழைய கோப்புகளை தூசித்தட்டி, கோல்மால் செய்வதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, கணபதியை, பல்கலைக்கழக குடியிருப்பில் இருந்து காலி செய்ய உத்தரவிட வேண்டுமென்று பல்கலைக்கழக ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பல்கலைக்கழக குடியிருப்பில் இருந்து கணபதியை காலி செய்ய, பதிவாளர் வனிதா உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவில், "ஜாமீனில் வெளிவந்துள்ள உங்களை (கணபதி), பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கோப்புகளுடன், ரகசியமாக சந்திப்பதாக மீடியாக்களில் செய்திகள் வந்துள்ளன. இது பாரதியார் பல்கலைக்கழகத்தின் இமேஜை கடுமையாக பாதிக்கும். எனவே, மனக்கசப்பு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, துணைவேந்தர் பங்களாவில் இருந்து உங்களை காலி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், இந்த வழக்கு முடியும்வரை, பங்களாவை ஆக்கிரமிப்பு செய்ய வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்புதலை, பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக்குழு, கடந்த 11-ம் தேதி வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, 12-ம் தேதி, பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், இன்றுவரை இந்த உத்தரவு ஆணை கணபதியிடம் வழங்கப்படவில்லை என பல்கலைக்கழக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.





இதுகுறித்து பல்கலைக்கழக ஊழியர்கள் கூறுகையில், "கணபதியை ரகசியமாக சந்தித்தவர்கள் குறித்து, மேலிடத்துக்கு அவ்வபோது அப்டேட்கள் வழங்கப்பட்டு வந்தன. எனவே, தங்களது இடத்துக்கு பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, இந்த முடிவை எடுத்துள்ளனர். தற்போதுதான், இந்த உத்தரவு பல்கலைக்கழக பொறியாளருக்குக் கிடைத்துள்ளது. அவர்கள்தான் இனி அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்றனர்.

No comments:

Post a Comment

PG med counselling ’24, after delay, from Nov 8

PG med counselling ’24, after delay, from Nov 8  TIMES NEWS NETWORK 02.11.2024 Chennai : PG medical counselling for 2024, which faced signif...