Saturday, April 21, 2018


சிறுமியரை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை அளிக்க முடிவு 

dinamalar

புதுடில்லி: சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு, துாக்கு தண்டனை கிடைக்கும் வகையில், 'போஸ்கோ' சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.



ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், சமீபத்தில், 8 வயது சிறுமி, ஒரு கும்பலால் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உ.பி., மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், கடந்த ஒரு வாரத்தில், மூன்று சிறுமியர், பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகி உள்ளனர்.சிறுமியர் பாலியல் கொடுமைக்கு ஆளாவது தொடர்பாக, வழக்கறிஞர்,

அலோக் ஸ்ரீவத்சவா, உச்ச நீதிமன்றத்தில், பொது நல மனு தாக்கல் செய்தார்.

'போஸ்கோ':

இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.மத்திய அரசு சார்பில், வழக்கறிஞர், அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணு கோபால் ஆஜரானார்.அப்போது, அவர் கூறியதாவது: பாலியல் கொடுமைகளுக்கு சிறுமியர்ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இதையடுத்து, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு, துாக்கு தண்டனை கிடைக்கும் வகையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டம் எனப்படும், 'போஸ்கோ' சட்டத்தில் திருத்தம் செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, இந்தவழக்கு விசாரணை, வரும், 27க்கு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச் சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, மேனகா, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், இதை எதிர்கொள்வது குறித்து, போலீசாருக்கு பயிற்சி அளிக்க வேண்டிய அவசியம் உருவாகி உள்ளது.

முன்னுரிமை

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணைக்கு, முன்னுரிமை தரும்படி, அனைத்து போலீஸ் அதிகாரிகளும் அறிவுறுத்தபட வேண்டும்.இந்தவிசாரணைக்கு தடையாக இருக்கும் போலீஸ் அதிகாரிகள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024