சென்னை உபெர் ஓட்டுநர்களுக்கு புதிய ‘மொபைல் ஆப்’ அறிமுகம்
Published : 11 Apr 2018 15:29 IST
சென்னை உட்பட குறிப்பிட்ட நகரங்களில் உபெர் நிறுவனத்தின் ஓட்டுநர்களுக்காக புதிய ‘மொபைல் ஆப்’ (செயலி) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
பன்னாட்டு கால் டாக்ஸி நிறுவனமான உபெர் இந்தியாவின் தனது வர்த்தகத்தை விரிவு படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி ஓட்டுநர்களையும் ஈர்த்து வருகிறது. இந்நிலையில் தங்கள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் ஓட்டுநர்களின் வசதிக்காக, “Earnings tracker” வசதியுடன் மொபைல் ஆப் ஒன்றை உபெர் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது.
உபெர் கார் ஓட்டுநர்கள் ஒவ்வொரு முறை பயணம் முடிந்ததும், தங்களுக்கு கிடைத்த பங்கு தொகை எவ்வளவு என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த ஆப் முதல்கட்டமாக சென்னை மற்றும் கொச்சி நகரங்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்படுகிறது.
அதேபோல், பெங்களூருவில் 100 ஓட்டுநர்களுக்கும் இந்த வசதி வழங்கப்படுகிறது. தொடர்ந்து இந்தியாவின் மற்ற நகரங்களுக்கும் இந்த வசதி பின்னர் விரிவு படுத்தப்படும்.
இதுமட்டுமின்றி தற்போதைய போக்குவரத்து சந்தை நிலவரம், தங்களுக்கு கிடைக்க கூடிய வாய்ப்புகள் போன்றவற்றையும் உபெர் ஓட்டுநர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். மேலும் தங்கள் கார்களில் பயணம் செய்த பயணிகளின் கருத்தையும் அறியலாம். சக ஓட்டுநர்கள் குறித்த விவரங்கள் போன்றவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து உபெர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தாரா கோஸ்ரோவாஹி கூறுகையில் ‘‘நீண்ட ஆலோசனைக்கு பிறகு இந்த மொபைல் ஆப்பை உருவாக்கியுள்ளோம். மொத்தம் ஒரு லட்சம் பயணங்களுக்கு பின் அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புள்ளி விவரங்களை கொண்டு இந்த ஆப்பை தயாரித்துள்ளோம்’’ எனக் கூறினார்.
No comments:
Post a Comment