Monday, April 2, 2018

வீடு தேடி உதவித்தொகை: அசத்திய கரூர் கலெக்டர்

Updated : ஏப் 02, 2018 01:49 | Added : ஏப் 02, 2018 01:27



கரூர் : வீடு தேடிச் சென்று, ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவித்தொகை வழங்கிய கரூர் கலெக்டர், அவர் வீட்டில் அமர்ந்து உணவருந்தினார்.

கரூர் அடுத்த, சின்னம நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராக்கம்மாள், 80. இவர் வறுமையில் இருப்பதையறிந்த, கலெக்டர் அன்பழகன், அவரது வீட்டிற்கு நேரில் சென்று, முதியோர் உதவித்தொகை வழங்கினார்.

கலெக்டர் அன்பழகன் கூறிதாவது: கடந்த, 28ம் தேதி, மூக்கனாங்குறிச்சியில், மனுநீதி நாள் முகாம் நடந்தது. அப்போது, முகாமிற்கு வர முடியாமல், அரசு உதவிக்கு காத்திருப்போர் இருக்கலாம் என தோன்றியது. அங்குள்ள, வி.ஏ.ஓ.,விடம், 'பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் யாரும் இருக்கின்றனரா' என கேட்டேன்.

அப்போது, சின்னமாநாயக்கன்பட்டியில், 80 வயது மூதாட்டி ராக்கம்மாள், ஆதரவின்றி கஷ்டப்படுவது தெரிந்தது. அவரது குடிசைக்கு நேரில் சென்ற போது, மூதாட்டியின் நிலை புரிந்தது. என் வீட்டில் இருந்து, எடுத்து சென்ற உணவை அவருக்கு பரிமாறி, நானும் அவருடன் அமர்ந்து சாப்பிட்டேன்.

தன் வீட்டிற்கு வந்திருப்பது, கலெக்டர் என்பதைக் கூட அறியாத அவரது நிலை கண்டு, மனதில் வலி ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக, முதியோர் உதவித்தொகை ஆணை வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024