Thursday, August 2, 2018

மருத்துவம்: கூடுதல் இடம் இல்லை

சுப்ரீம் கோர்ட் கைவிரிப்பு  02.08.2018

புதுடில்லி : தமிழகத்தில் அமலில் உள்ள, 69 சதவீத இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட, தகுதியுள்ள மாணவர்கள் மருத்துவக் கல்லுாரியில் சேரும் வகையில், கூடுதல் இடங்கள் உருவாக்கும்படி விடுக்கப்பட்ட கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.



தமிழகத்தில், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், குறிப்பிட்ட சில சமூகத்தினருக்கு, 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட இரு மாணவர்கள், தாங்களும்

மருத்துவக் கல்லுாரியில் சேரும் வகையில், கூடுதல் இடங்களை உருவாக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு, நீதிபதிகள், அருண் மிஸ்ரா, அப்துல் நஸீர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. வாதங்கள் முடிந்த பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட, தகுதியுள்ள மாணவர்கள், மருத்துவக் கல்லுாரியில் சேரும் வகையில், கூடுதல் இடங்கள் உருவாக்கி, இதற்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம்; அத்தகைய உத்தரவுகளை, நீதிபதிகள் பிறப்பித்திருக்கக் கூடாது. எனவே, அதை, நாங்கள் மீண்டும் செய்யப் போவதில்லை.

மருத்துவக் கல்லுாரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்கும்படி, நீதிபதிகள் கூற முடியுமா என்பதே, தற்போதுள்ள கேள்வி.

சட்டப்படி, இந்திய மருத்துவ கவுன்சில் வரையறுத்த எண்ணிக்கையை விட அதிகமாக, ஒரு இடத்தைக் கூட புதிதாக உருவாக்க முடியாது.

அவ்வாறு உருவாக்க, சம்பந்தப்பட்ட மாநில அரசு சம்மதித்தாலும், நாங்கள் அதை செய்ய முடியாது. இட ஒதுக்கீடு, 50 சதவீதத்துக்குள் இருக்க வேண்டுமா என்பதை மட்டுமே, நீதிமன்றம் பரிசீலிக்க முடியும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.09.2024