Thursday, August 2, 2018

இன்ஜினியருக்கு, 'நோட்டீஸ்' : வருமான வரி துறை குளறுபடி

Added : ஆக 02, 2018 00:43

பல்ராம்கர்: ஹரியானா மாநிலத்தில், 585 சதுர அடி வீட்டில் வசிக்கும் ஓய்வுபெற்ற இன்ஜினியருக்கு, 27 கோடி ரூபாய் முதலீடு குறித்து விளக்கம் கேட்டு, வருமான வரி துறை, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
முதலீடு : ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பரீதாபாத் மாவட்டத்தில் வசிப்பவர் நந்த கிஷோர்.தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி, 2010ல் ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பின் கிடைத்த, ஏழு லட்சம் ரூபாயை, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தார்.குறிப்பிட்டபடி, முதலீட்டு தொகைக்கு வட்டி தராமல், நிதி நிறுவனம் ஏமாற்றியது. மேலும், அசல் தொகையை திருப்பித் தராமல் மோசடி செய்தது. இதுகுறித்து போலீசில், நந்த கிஷோர் புகார் அளித்துள்ளார்.இந்நிலையில், சமீபத்தில், வருமான வரித் துறையில் இருந்து, 27 கோடி ரூபாய் முதலீடு குறித்து விளக்கம் அளிக்கும்படி வந்த நோட்டீசை பார்த்து, நந்த கிஷோர் அதிர்ச்சி அடைந்தார்.

அவர் கூறியதாவது:ஏற்கனவே, முதலீடு செய்த பணத்தை தராமல், மோசடி செய்த, தனியார் நிதி நிறுவனம் மீது அளித்த புகார், விசாரணையில் உள்ளது. 585 சதுர அடிதற்போது இருக்கும், 585 சதுர அடி வீட்டை தவிர, வேறு எந்த சொத்தும் இல்லை. வருமான வரி நோட்டீசில் கூறியது போல், என் பெயரில் எந்த முதலீடும் இல்லை.வருமான வரி துறை துணை இயக்குனர் கவுரவ் பாரிலை தொடர்பு கொள்ள முடியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024