Saturday, August 4, 2018

அண்ணா பல்கலையில் ஊழலுக்கு இடமில்லை: துணைவேந்தர் உறுதி

Added : ஆக 03, 2018 14:21 |


  சென்னை: அண்ணா பல்கலையில் ஊழலுக்கு இடமில்லை என துணைவேந்தர் சூரப்பா கூறியுள்ளார்.

சஸ்பெண்ட்

அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளுக்கு தேர்வு நடத்தும் தேர்வுத் துறையில் விடைத்தாள் திருத்துவதில் முறைகேடு நடந்ததாக புகார்எழுந்தது. அதிக மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் தலா 10 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, திண்டிவனத்தில் உள்ள அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரி முதல்வர் விஜயகுமார் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, உமா, விஜயகுமார், அண்ணா பல்கலையில் கணிதத்துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் சிவக்குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 19 மாணவர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் பெற்ற 19 மாணவர்களுக்கு சம்மன் அனுப்பி லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், துணைவேந்தர் சூரப்பா கூறுகையில், மறுமதிப்பீட்டு முறைகேடு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது; முறைகேட்டில்ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊழலுக்கு இடமளிக்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

பறிமுதல்

இது தொடர்பாக அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா கூறுகையில், அண்ணா பல்கலையில் ஊழலுக்கு இடமில்லை. விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு புகாரில் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் எத்தனை பேருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரியாது. புகார் குறித்து விரிவான , வெளிப்படையான விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரத்தில் தொடர்புள்ளவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். விடைத்தாள் முறைகேடு தொடர்பாக சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோப்பையும் கவனமாக பரிசீலனை செய்து வருவதாக கூறினார்.

நடவடிக்கை

அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில், பேராசரியை உமா முறைகேட்டில் ஈடுபட்டது நிருபணமாகியுள்ளதாகவும், ஆய்வுக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024