Saturday, August 4, 2018

ராமாயண காவிய யாத்திரை ரயில் ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு

Added : ஆக 03, 2018 23:39 |


சென்னை: ராமஜென்ம பூமியான அயோத்திக்கு, ராமாயண காவிய யாத்திரை என்ற, 'ஏசி' சிறப்பு ரயிலை, ஐ.ஆர்.சி.டி.சி., இயக்குகிறது. இந்த யாத்திரை ரயில், கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து, வரும், 31ல் புறப்பட்டு, மதுரை, திருச்சி, சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படுகிறது.

இப்பயணத்தில், ராமபிரான் வனவாசம் தொடங்கிய, மத்திய பிரதேசத்தில் உள்ள சித்திரக்கூடம், அகலிகை சாபவிமோசனம் பெற்ற இடமான, உத்தர பிரதேசத்தில் உள்ள சிருங்கவெற்பூர் மற்றும், துளசிதாசர் ராமாயணம் இயற்றிய, துளசி மானசமந்திர் சென்று வரலாம்.

பீஹார் மாநிலத்தில் உள்ள பழமையான மிதிலை நகரான தர்பங்கா, சீதை பிறந்ததாக கருதப்படும் சீதாமார்ஹி, ராமர் பிறந்த உத்தர பிரதேசம், அயோத்தி, சீதை தங்கியிருந்த மஹாராஷ்டிரா மாநிலம் பஞ்சவடி, ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற, தமிழகத்தின் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, தேவிபட்டினம் உட்பட, பல புனித தலங்களுக்கு சென்று வரலாம்.

மொத்தம், 12 நாட்கள் சுற்றுலாவிற்கு, 'ஏசி' மூன்றடுக்கு பெட்டியில் பயணம் செய்ய, ஒருவருக்கு, 39 ஆயிரத்து, 350 ரூபாய் கட்டணம்.மேலும் தகவலுக்கு, சென்னை, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40681, 98409 02919 என்ற, மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024