Saturday, August 4, 2018

மருத்துவ இடங்கள் நிரம்பின இன்று மாணவர் சேர்க்கை இல்லை

Added : ஆக 04, 2018 00:04

சென்னை:தமிழகத்தில், நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள் அனைத்தும் நிரம்பின. இதனால், இன்று நடைபெறுவதாக இருந்த மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரசு, தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள் அனைத்தும் நிரம்பி, வகுப்புகள் நடைபெறுகின்றன. நிர்வாக ஒதுக்கீட்டில், 516 எம்.பி.பி.எஸ்., - 715 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இதற்கான கவுன்சிலிங், ஜூலை, 30, 31ல் நடந்தது.
இந்த கவுன்சிலிங்கில் நிரம்பாத, 128 இடங்களுக்கான கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நேற்று நடந்தது. இதில், பகல், 12:30 மணிக்குள் அனைத்து இடங்களும் நிரம்பின. இதனால், இன்று நடைபெற இருந்த கவுன்சிலிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மருத்துவ தேர்வுக்குழு செயலர், செல்வராஜன் வெளியிட்ட அறிவிப்பு:நிர்வாக ஒதுக்கீட்டில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. இதனால், இன்று நடைபெற இருந்த கவுன்சிலிங் ரத்து செய்யப்படுகிறது. மாணவர்கள் யாரும் வர வேண்டாம். இன்றைய கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டிருந்த மாணவர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படுவர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024