Saturday, August 4, 2018

விமானத்தில் 150 பேர் உயிர் தப்பினர்

Added : ஆக 04, 2018 05:32

புதுடில்லி:மேற்காசிய நாடான, சவுதி அரேபியாவின், ரியாத் நகரில் இருந்து, 150 பேருடன் மும்பை புறப்பட்ட, 'ஜெட் ஏர்வேஸ்' விமானம் சறுக்கியபடி, ரன் வேயை விட்டு வெளியில் சென்று நின்றதால், விபத்து நடக்காமல் தப்பியது.
நேற்று காலை, ரியாத்தில் இருந்து, 142 பயணியர் உட்பட, 150 பேருடன், மும்பைக்கு புறப்பட்ட, 'ஜெட் ஏர்வேஸ்' விமானம் சறுக்கியதால், ரன் வேயை விட்டு வெளியே சென்று நின்றது.உடனே சம்பவ இடத்திற்கு வந்த, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்தில் இருந்த பயணியரை பத்திரமாக கீழே இறக்கி, விமான நிலைய வளாக கட்டடத்தில் தங்க வைத்தனர்.
ரன் வேயில் சென்ற போது, விமானி திடீரென பிரேக் போட்டதால், விமானம், ரன் வேயை தாண்டி சென்று நின்றதாக, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.சம்பவம் குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பதாக, மும்பையை சேர்ந்த, ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024