Thursday, April 5, 2018

மாநில செய்திகள்

பஸ் போக்குவரத்தில் பாதிப்பு இருக்காது போக்குவரத்து அதிகாரிகள் தகவல்



முழு அடைப்பு போராட்டம் இன்று(வியாழக்கிழமை) நடைபெற இருப்பதையொட்டி போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:–

ஏப்ரல் 05, 2018, 05:37 AM

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரத்து 850 பஸ்கள் இயக்கப்படுகின்றன. முழு அடைப்பு போராட்டத்துக்கு சில போக்குவரத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. விருப்பம் இருந்தால் ஊழியர்கள் பங்கேற்கலாம் என்று தொழிற்சங்கங்களும் தெரிவித்துள்ளன. என்றாலும் பெரிய அளவில் பஸ் போக்குவரத்து பாதிப்பு இருக்காது.

பெரும்பாலான பஸ்கள் அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்படும். அப்படி பாதிப்பு இருந்தாலும் 300 முதல் 400 பஸ்களின் எண்ணிக்கை தான் குறையும். சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் எந்தவித பாதிப்பும் இருக்காது. பாதுகாப்புக்காக பஸ் நிலையத்தில் போலீசார் அதிகளவில் இருக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024