Thursday, April 5, 2018

தேசிய செய்திகள்

நடிகர் சல்மான்கான் தப்புவாரா? மான்வேட்டை வழக்கில் இன்று தீர்ப்பு




பிரபல இந்தி நட்சத்திரங்கள் சல்மான்கான், சயீப் அலிகான், நடிகை தபு சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர், 1998–ம் வருடம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே நடந்த ‘ஹம் சாத் சாத் ஹைன்’ இந்தி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.

ஏப்ரல் 05, 2018, 04:23 AM

ஜோத்பூர்,

அக்டோபர் 1–ந் தேதி இரவு, அவர்கள் அங்கு கங்கணி என்ற இடத்தில் உள்ள காட்டுக்கு ஜிப்சி காரில் சென்றனர். காரை ஓட்டிச்சென்ற சல்மான்கான், அங்கு அபூர்வமான கருப்பு மான்கள் இரண்டை சுட்டுத்தள்ளி வேட்டையாடியதாக புகார் எழுந்து உள்ளது.

இதில் சல்மான்கான் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் பிரிவு 51–ன் கீழும், மற்றவர்கள் மீது வன விலங்கு பாதுகாப்பு சட்டம் பிரிவு 51 உடன் இணைந்த இந்திய தண்டனை சட்டம் பிரிவு 149–ன் கீழும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இவர்கள் மீதான வழக்கு, ஜோத்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 20 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், இன்று மாஜிஸ்திரேட்டு தேவ் குமார் காத்ரி தனது தீர்ப்பை வழங்க உள்ளார்.

அப்போது நடிகர் சல்மான்கான் உள்ளிட்டவர்கள் தப்புவார்களா, தண்டிக்கப்படுவார்களா என்பது தெரிய வரும்.

கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக சல்மான்கான் தனி விமானத்தில் மும்பையில் இருந்து நேற்று ஜோத்பூர் சென்றார். வழக்கில் தொடர்பு உடைய மற்றவர்களும் விமானம் மூலம் மும்பையில் இருந்து ஜோத்பூர் விரைந்தனர்.

இந்த தீர்ப்பு, இந்திப்பட உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024