4 மகன்கள் இருந்தும் சோகம் அனாதை பிணமான முதியவர்
Added : ஏப் 05, 2018 02:19
வேலுார்:சடலத்தை வாங்கிச் செல்ல உறவினர்கள் மறுத்ததால், முதியவரின் உடலை, சோளிங்கர் பேரூராட்சி பணியாளர்கள், குப்பை வண்டியில் எடுத்து சென்று, அடக்கம் செய்தனர்.
வேலுார் மாவட்டம், சோளிங்கரைச் சேர்ந்தவர், ராஜாராம், 75; துணி வியாபாரி. இவருக்கு, மனைவி, நான்கு மகன்கள் இருந்தனர். 30 ஆண்டுகளுக்கு முன், மனைவி இறந்ததும், சொத்துகளை எழுதி வாங்கிய மகன்கள், தந்தையை, வீட்டை விட்டு துரத்தியதாக கூறப்படுகிறது.
கடந்த, 30 ஆண்டுகளாக, சோளிங்கர் போலீஸ் ஸ்டேஷன் அருகே தங்கி, பிச்சை எடுத்து வந்தார். மார்ச், 27ல், உடல்நலக் குறைவால், ராஜாராம் சாலையோரம் இறந்து கிடந்தார். சோளிங்கர் போலீசார், சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.ராஜாராமின் மகன்கள் விபரம் ஏதும் தெரியாததால், உடலை வாங்கி செல்லும்படி, ராஜாராமின் உறவினர்கள் சிலரிடம் போலீசார் அறிவுறுத்தினர்.
உறவினர்கள் மறுத்த நிலையில், அரசு மருத்துவமனையிலேயே சடலம் வைக்கப்பட்டிருந்தது.பின், அனாதை பிணமாக அறிவிக்கப்பட்ட ராஜாராமின் சடலத்தை, சோளிங்கர் பேரூராட்சி பணியாளர்கள், குப்பை வண்டியில் எடுத்து சென்று, அங்குள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

No comments:
Post a Comment