Wednesday, April 11, 2018

மாநில செய்திகள்
சென்னை திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி தொடங்கியது



சென்னை திருவிடந்தையில் 10வது ராணுவ தளவாட கண்காட்சி இன்று தொடங்கியது. #MilitaryLogisticsExhibition

ஏப்ரல் 11, 2018, 10:55 AM
சென்னை,

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் சுமார் ரூ.800 கோடியில், 10வது ராணுவ தளவாட கண்காட்சி 4 நாட்கள் நடைபெறுகிறது. நமது நாட்டில் இதுவரை நடத்தப்பட்டு வந்து உள்ள ராணுவ தளவாட கண்காட்சிகளில் எல்லாம் மிகப்பெரிய கண்காட்சியாக இது அமைந்து உள்ளது.

கண்காட்சியின் மூன்றாவது நாளில் (13-ந் தேதி), இந்திய-ரஷிய ராணுவ தொழில் துறை மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் சார்பில் 200 தொழில் அதிபர்களும், ரஷியாவின் தரப்பில் 100 தொழில் அதிபர்களும் கலந்து கொள்வார்கள்.

4-வது நாள் (14-ந் தேதி) பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இந்த கண்காட்சியை பார்வையிடுவதற்கு ராணுவ தளவாட கண்காட்சி இணையதளத்தில் பதிவு செய்து, அதற்கான ஒப்புகை சீட்டை கொண்டு, கண்காட்சி நடைபெறும் இடத்தில் நுழைவுச்சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த கண்காட்சியில் பங்கேற்பதாக 50-க்கும் மேற்பட்ட நாடுகள், 700-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பதிவு செய்து உள்ளனர். இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கம், நமது நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி திறனையும், ராக்கெட் உற்பத்தி திறனையும் உலகுக்கு பறை சாற்றுவதாக அமையும்.

போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வானில் நடத்துகிற சாகச காட்சிகள் மயிர் கூச்செறிவதாக அமையும்,

இந்த கண்காட்சியையொட்டி, சென்னை துறைமுகத்தில் இந்திய கடற்படை கப்பல்கள் 13-ந் தேதியும், 15-ந் தேதியும் நிறுத்தி வைக்கப்படும். அவற்றினுள் ஏறி பார்க்கவும் அனுமதிக்கப்படும்.

ராணுவ தளவாட கண்காட்சி, பேஸ் புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Diwali surprise: 4% hike in DA for govt employees

Diwali surprise: 4% hike in DA for govt employees  TIMES NEWS NETWORK 31.10.2024  Chandigarh : Calling it a Diwali bonanza for the families ...