அட்சய திருதியை முன்னிட்டு நகை வாங்க மக்கள் ஆர்வம் : ஒரே நாளில் சவரனுக்கு 136 ரூபாய் குறைவு
தினகரன்
சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில் ஒரே நாளில் சவரனுக்கு 136 ரூபாய் குறைந்துள்ளது. வரும் புதன்கிழமை அன்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. அன்றை தினம் நகை வாங்கினால் செல்வம் பெருகும் என்று நம்பப்படுவதால் ஏராளமானவர்கள் நகை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை திடீரென குறைந்திருக்கிறது. தங்கத்தின் விலை வீழ்ச்சி குறித்து தங்க நகை விற்பனையாளர்கள் கூறிய போது 2 நாட்கள் முன்பாக சிரியா நாட்டின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர், அதன் காரணமாக உலகத்தில் மற்ற நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலை குறைந்திருப்பதாக தங்க நகை விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். அட்சய திருதி நாளில் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும். பொதுமக்கள் நகைகளை வாங்கும் போது ஹல்மார்க் முத்திரை உள்ள தங்க நகையை வாங்குமாறும் விஐஎஸ் நிறுவனத்திடம் அங்கீகாரம் பெற்ற நகை கடைகளுக்கு செல்லுமாறும் இந்திய தரச்சான்று நிறுவனம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment