Sunday, April 22, 2018

ஆண்களுக்கு மட்டும் திருவிழா : 381 ஆடுகள் வெட்டி பூஜை

Added : ஏப் 22, 2018 01:26



சிவகங்கை: சிவகங்கை அருகே, ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சித்திரை திருவிழா நடந்தது. 381 ஆடுகளை வெட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.சிவகங்கை, திருமலையில் மடைக்கருப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா ஏப்.14ல் காப்புகட்டுதலுடன் துவங்கியது. விழாவில், பெண்களுக்கு அனுமதியில்லை. ஆண்கள் மட்டுமே காப்பு கட்டி விரதம் துவங்கினர்.கோவில் வளாகத்தின் அருகே, உள்ள கண்மாயில் அனைத்து மடைகளும் அடைக்கப்பட்டன. விழாவின், எட்டாம் நாளான நேற்று முன்தினம் மாலை திருமலையில் இருந்து, 1,000த்துக்கும் மேற்பட்ட ஆண்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அரிவாள், மணி, கோவில் காளைகள், கருப்பு வெள்ளாடுகளுடன் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். பின், மலைக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் தீர்த்தம் எடுத்து வந்து, ஒரு மண் பானையில் பொங்கலிட்டனர்.பின், 381 ஆடுகளை பலியிட்டனர். பொங்கல், ஆடுகளின் தலைகளை சுவாமி முன், படைத்து இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024