Sunday, April 22, 2018

அரசு இணையதளம் முடக்கம்

Added : ஏப் 22, 2018 04:27

சென்னை: தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம், இரண்டு நாட்களாக முடங்கி உள்ளது. தமிழக அரசின், அதிகாரப்பூர்வ இணையதளமான, www.tn.gov.in நேற்று முன்தினம் முதல் முடங்கி உள்ளது. இந்த இணையதளத்தில், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன.அத்துடன் துறை வாரியாக, கொள்கை விளக்க குறிப்புகள், அரசு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு இ - சேவை, இந்த இணையதளம் வழியாக வழங்கப்பட்டது. செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வெளியிடப்படும், பத்திரிகை செய்திகள், அரசாணைகள், இந்த இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்படும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024