Saturday, April 7, 2018

மெரினா கடற்கரை மற்றும் 4 நகர பஸ்நிலையங்களில் ‘வை-பை’ வசதி



சென்னை மெரினா கடற்கரை மற்றும் திருச்சி, மதுரை, சேலம், கோவை ஆகிய பஸ் நிலையங்களில் ‘வை-பை’ வசதியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

ஏப்ரல் 07, 2018, 05:15 AM
சென்னை,

ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் உள்ள பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், வை-பை என்னும் கம்பியில்லா இணைய வசதி கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் வகையில், முதற்கட்டமாக பெரிய பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் போன்ற 50 இடங்களில் ‘அம்மா வை-பை மண்டலம்’ ஏற்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வாயிலாக ரூ.8 கோடியே 50 லட்சம் செலவில் 50 இடங்களில் அம்மா ‘வை-பை’ மண்டலங்கள் அமைக்க தமிழ்நாடு அரசால் 16.8.2017 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி முதற்கட்டமாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை, கோவை காந்திபுரம் பஸ் நிலையம், சேலம் மத்திய பஸ்நிலையம், திருச்சி மத்திய பஸ் நிலையம், மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ்நிலையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா ‘வை-பை’ மண்டலங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

அம்மா ‘வை-பை’ மண்டலங்களில் ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் ‘வை-பை’ வசதி இலவசமாக வழங்கப்படும். அதன் பின்னர், பயன்படுத்தப்படும் கம்பியில்லா இணைய சேவை வசதிக்கு மணிக்கு ரூ.10 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Diwali surprise: 4% hike in DA for govt employees

Diwali surprise: 4% hike in DA for govt employees  TIMES NEWS NETWORK 31.10.2024  Chandigarh : Calling it a Diwali bonanza for the families ...