Saturday, April 7, 2018

துணைவேந்தர் நியமனம் கமல் கண்டனம்

Added : ஏப் 07, 2018 02:06


சென்னை:'காவிரியில் இருந்து தண்ணீர் கேட்டால், துணைவேந்தரை அனுப்புகின்றனர்' என, மக்கள் நீதி மைய தலைவர் கமல், தன், 'டுவிட்டர்' பதிவில் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலை துணை வேந்தராக, கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை, கவர்னர், பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், சூரப்பா நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இந்த நியமனத்திற்கு, பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, மக்கள் நீதி மைய தலைவரும், நடிகருமான, கமல்ஹாசன், டுவிட்டரில் கூறியிருப்பதாவது:கர்நாடகாவிலிருந்து, காவிரி தண்ணீரை கேட்டால், துணைவேந்தரை அனுப்பி வைக்கின்றனர். தமிழக மக்களின் மனநிலையை, மத்திய, மாநில அரசுகள் உணரவில்லையா; உணரத் தேவையில்லை என, கருதி விட்டனரா என்று, தெரியவில்லை.
எதை எதிர்பார்த்து, தமிழகத்தை சீண்டுகிறார்கள் என்றும் தெரியவில்லை,இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025