Saturday, April 7, 2018

தனிப்படுத்தவா?வைரமுத்து கேள்வி!

Added : ஏப் 07, 2018 02:07

சென்னை:'மத்திய அரசின் நடவடிக்கை, தமிழகத்தை தனிமைப்படுத்தவா; தனிப்படுத்தவா...' என, கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலை துணைவேந்தராக, கர்நாடகாவை சேர்ந்த, சூரப்பா, நியமனம் செய்யப்பட்டதற்கு, பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கவிஞர் வைரமுத்து, தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியுள்ளதாவது:நாட்டின் பிரதமர் பதவிக்கு தான், தமிழருக்கு வாய்ப்பில்லை. துணை வேந்தர் பதவிக்குமா, தமிழருக்கு தகுதியில்லை; இதுபோன்ற செயல்கள் எல்லாம், தமிழகத்தை தனிமைப்படுத்தவா; தனிப்படுத்தவா...இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024