Thursday, April 12, 2018

பிரதமர் வருகை: சென்னையில் இன்று 5,000 போலீசார் பாதுகாப்பு

Updated : ஏப் 12, 2018 00:14 | Added : ஏப் 11, 2018 18:52 | 




சென்னை : பிரதமரின் சென்னை வருகையையொட்டி சென்னையில், 3 கூடுதல் ஆணையர் தலைமையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

ராணுவ அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள பிரமாண்ட ராணுவ கண்காட்சி சென்னை அருகே திருவிடந்தையில் நேற்று துவங்கியது. ராணுவ கண்காட்சியை முறைப்படி துவக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப்.,12) சென்னை வருகிறார். அவரது வருகையையொட்டி சென்னை விமான நிலையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 கூடுதல் ஆணையர் தலைமையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், சிறப்பு அதிவிரைவுப்படை, கமாண்டோ படையினரும் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.

விமானநிலையம், ஐஐடி அடையாறு புற்றுநோய் மையம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும், ஆலந்தூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை ஐஐடி-க்கு 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

பிரதமரின் வருகையின் போது கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என திமுக உள்ளிட்ட சில கட்சிகள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024