Wednesday, April 11, 2018

' ஹோமியோபதியினர் பிற மருத்துவம் செய்ய கூடாது'

Added : ஏப் 11, 2018 00:21

சென்னை: ''ஹோமியோபதி டாக்டர்கள், துறை ரீதியான சிகிச்சை மட்டும் அளிக்க வேண்டும்; பிற மருத்துவ முறைகளை பின்பற்றி சிகிச்சை அளிக்கக் கூடாது,'' என, மத்திய ஹோமியோபதி கவுன்சிலிங் தலைவர், ராம்ஜி சிங் பேசினார்.

உலக ஹோமியோபதி தினத்தையொட்டி, ஹோமியோபதி சிகிச்சை குறித்த, இரண்டு நாள் கருத்தரங்கம், சென்னை, கலைவாணர் அரங்கில், நேற்று துவங்கியது.நிகழ்ச்சியில், ராம்ஜி சிங் பேசியதாவது:ஹோமியோபதி டாக்டர் களை அதிகம் உருவாக்கும் விதத்தில், கல்லுாரி கள் துவங்குவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. முதலில், கல்லுாரிகள் துவங்க அனுமதி வழங்கப் படும். ஐந்து ஆண்டுக்கு பின், கல்லுாரிகளில் உள்ள, உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வு செய்யப்பட்டு, அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும்.ஹோமியோபதி டாக்டர் கள், ஹோமியோபதி மருந்து வம் மற்றும் சிகிச்சைகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும். அலோபதி உள்ளிட்ட, பிற மருத்துவ முறைகளை பின்பற்றி, சிகிச்சை அளிக்க கூடாது. இது குறித்து, பதிவு செய்துள்ள அனைத்து ஹோமியோபதி டாக்டர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.தமிழ்நாடு டாக்டர், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர், கீதாலட்சுமி பேசியதாவது:தமிழகத்தில் மட்டும் தான், அனைத்து, ஆயுஷ் படிப்புகளுக்கான மருத்துவ கல்லுாரிகளும் உள்ளன. அவை, ஒரே பல்கலை பொறுப்பில் கொண்டு வரப்பட்டு உள்ளன. ஹோமியோபதி துறை, அதிகளவில் வளர்ச்சி அடைய வேண்டும்.இதற்காக, துறையில், பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்வது அவசியம். எம்.ஜி.ஆர்., பல்கலை சார்பில், ஹோமியோபதி துறையில், ஆராய்ச்சி மேற்கொள்ள, ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்' ஹோமியோபதியினர் பிற மருத்துவம் செய்ய கூடாது'
சென்னை, ஏப். 11-''ஹோமியோபதி டாக்டர்கள், துறை ரீதியான சிகிச்சை மட்டும் அளிக்க வேண்டும்; பிற மருத்துவ முறைகளை பின்பற்றி சிகிச்சை அளிக்கக் கூடாது,'' என, மத்திய ஹோமியோபதி கவுன்சிலிங் தலைவர், ராம்ஜி சிங் பேசினார்.உலக ஹோமியோபதி தினத்தையொட்டி, ஹோமியோபதி சிகிச்சை குறித்த, இரண்டு நாள் கருத்தரங்கம், சென்னை, கலைவாணர் அரங்கில், நேற்று துவங்கியது.நிகழ்ச்சியில், ராம்ஜி சிங் பேசியதாவது:ஹோமியோபதி டாக்டர் களை அதிகம் உருவாக்கும் விதத்தில், கல்லுாரி கள் துவங்குவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. முதலில், கல்லுாரிகள் துவங்க அனுமதி வழங்கப் படும். ஐந்து ஆண்டுக்கு பின், கல்லுாரிகளில் உள்ள, உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வு செய்யப்பட்டு, அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும்.ஹோமியோபதி டாக்டர் கள், ஹோமியோபதி மருந்து வம் மற்றும் சிகிச்சைகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும். அலோபதி உள்ளிட்ட, பிற மருத்துவ முறைகளை பின்பற்றி, சிகிச்சை அளிக்க கூடாது. இது குறித்து, பதிவு செய்துள்ள அனைத்து ஹோமியோபதி டாக்டர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.தமிழ்நாடு டாக்டர், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர், கீதாலட்சுமி பேசியதாவது:தமிழகத்தில் மட்டும் தான், அனைத்து, ஆயுஷ் படிப்புகளுக்கான மருத்துவ கல்லுாரிகளும் உள்ளன. அவை, ஒரே பல்கலை பொறுப்பில் கொண்டு வரப்பட்டு உள்ளன. ஹோமியோபதி துறை, அதிகளவில் வளர்ச்சி அடைய வேண்டும்.இதற்காக, துறையில், பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்வது அவசியம். எம்.ஜி.ஆர்., பல்கலை சார்பில், ஹோமியோபதி துறையில், ஆராய்ச்சி மேற்கொள்ள, ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

Diwali surprise: 4% hike in DA for govt employees

Diwali surprise: 4% hike in DA for govt employees  TIMES NEWS NETWORK 31.10.2024  Chandigarh : Calling it a Diwali bonanza for the families ...