Wednesday, April 11, 2018

மருத்துவ படிப்புக்கு கவுன்சிலிங் தாமதம்
Added : ஏப் 10, 2018 21:57

சென்னை: 'முதுநிலை மருத்துவ படிப்பில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் நடத்துவதில் தாமதம் ஏற்படும்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:முதுநிலை மருத்துவ படிப்பில், அரசு டாக்டர்களுக்கு அளிக்கப்படும் சலுகை மதிப்பெண் தொடர்பான வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ளன.வழக்குகளின் விசாரணை முடிந்து, தீர்ப்பு வரும் வரை, கவுன்சிலிங்கிற்கான தரவரிசை பட்டியல் ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024