Saturday, April 14, 2018

அஜினோமோட்டோ உற்பத்தி சென்னையில் விரைவில் துவங்கும்

Added : ஏப் 13, 2018 21:14

- எல்.முருகராஜ் -''உணவுக்கு சுவை கூட்டும் பொருளான, 'மோனோ சோடியம் குளூடோமேட்டை' தயாரிக்கும், அஜினோமோட்டோ நிறுவனம், விரைவில், சென்னையில் இருந்தும், உற்பத்தியை துவக்க திட்டமிட்டுள்ளது,'' என, அதன் இந்திய சந்தைப்பிரிவு மேலாளர், கோவிந்தா பிஸ்வாஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: ஜப்பானை சேர்ந்த, அஜினோமோட்டோ நிறுவனம், 'ஹாப்பிமா' என்ற பெயரில் ப்ரைடு ரைஸ் தயாரிக்க உதவும் பவுடர், உடனடியாக காபி, டீ தயாரிக்க உதவும், 'பிளெண்டி' போன்ற, பல்வேறு உணவுப் பொருட்களை தயாரித்து, உலகம் முழுவதும் வினியோகித்து வருகிறது. அஜினோமோட்டோவின் மற்றும் ஒரு தயாரிப்பு தான்,மோனோ சோடியம் குளூடோமேட். இது உப்பு போன்றது; உணவிற்கான சுவையை கூட்டக்கூடியது. ஜப்பானில் ஒரு நுாற்றாண்டிற்கு மேல் புழக்கத்தில் இருந்து வருவது.அஜினோமோட்டோவின் தயாரிப்புகள், கடுமையான தரக் கட்டுப்பாட்டிற்கு பின்பே வெளிவருகின்றன.எங்களுடைய தயாரிப்புகள் மிகத்தரமானவை என்பதை நிரூபிப்பதற்காக, ஒவ்வொரு நாட்டிலும், அந்தந்த நாட்டின் உணவு தரக்கட்டுப்பாடு நிறுவனத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளோம். இந்தியாவில், எப்.எஸ்.எஸ்.ஐ.,யின் தரச்சான்று பெற்றுள்ளோம்.உணவுக்கு சுவை கூட்டும், மோனோ சோடியம் குளூடோமேட்டை, கரும்பு, சோளம், மரவள்ளிக்கிழங்கு போன்ற இயற்கை மூலப்பொருட்கள் மூலம், நொதித்தல் முறையில் தயார் செய்கிறோம்.ரசாயனம் கலப்பதில்லை. மோனோ சோடியம் குளூடோமேட்டை, அஜினோமோட்டோ என்ற பெயரிலேயே, இந்தியாவில் விற்று வருகிறோம். இப்போது, தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து, தயாராகி வருகிறது.அதிகரித்து வரும் இந்தியாவின் தேவையைக் கருதி, விரைவில், சென்னையில் உற்பத்தி செய்யவுள்ளோம்.சென்னையில் செயல்பட்டு வரும் அஜினோமோட்டோ நிறுவனத்தில், தற்போது, 144 பேர் பணியாற்றி வருகின்றனர். இப்போது இங்கு, பிளெண்டி ரெடிமிக்ஸ் காபி, டீ பாக்கெட்டுகள் தயாராகின்றன. ஆண்டுக்கு, 4,100 டன் உற்பத்தி செய்யப்படுகின்றன.தமிழக சந்தையில், 90 சதவீதம் மார்கெட்டை பிடித்துள்ளது; 44 ஆயிரம் கடைகளில் இது கிடைக்கின்றன. அடுத்த ஆண்டு இன்னும், 22 ஆயிரம் கடைகளில் கிடைக்கும். இந்த தொழிற்சாலையில் தமிழகத்தின் தேவை கருதி, விரைவில் அஜினோமோட்டோ உற்பத்தி செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024