Thursday, April 26, 2018

நீட்' தேர்வில் வெற்றி பெற்றும் தவிக்கும் மேற்படிப்பு மாணவர்கள்

Added : ஏப் 26, 2018 04:50

திண்டுக்கல்: 'நீட்' தேர்வில் முன்னிலை பெற்றும் மாநில அரசின் கவுன்சிலிங் தாமதத்தால் மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் தவிப்பில் உள்ளனர்.முதுநிலை பட்ட மேற்படிப்பில் கிராமப்புறத்தில் பணியாற்றிய டாக்டர்களுக்கான ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் அண்மையில், மருத்துவ கவுன்சில் விதிமுறையின்படியே நடத்த வேண்டும்' என தீர்ப்பளித்துள்ளது. இதே போன்று தொலைதுாரத்தில் பணியாற்றும் டாக்டர்களுக்கு' தனி ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்து உத்தரவிட்டது. இது அரசுக்கு பின்னடைவாக அமைந்தது. இதில் மேல் முறையீடு செய்ய தமிழக சுகாதாரத்துறை உயரதிகாரிகள் முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசித்து வருகின்றனர். இதனால் மாநில பட்ட மேற்படிப்பு கவுன்சிலிங் தாமதமாகி வருகிறது.இதற்கிடையே 'நீட்' தேர்வில் பங்கேற்று, தரவரிசையில் முன்னிலை பெற்ற தமிழக டாக்டர்கள், பட்ட மேற்படிப்புக்கு அகில இந்திய கவுன்சிலிங் மூலம் வேறு மாநிலங்களில் கிடைத்த படிப்புகளில் அனுமதி பெற்றுள்ளனர். மாநில அரசு கவுன்சிலிங் நடத்தினால் இங்கு, விரும்பிய பிரிவில் 'சீட்' பெற வாய்ப்புள்ளது. அதற்காக கிடைத்த இடங்களில் சேராமல் காத்திருக்கின்றனர். ஆனால் மேல்முறையீடு சிந்தனையால் கவுன்சிலிங் நடத்தாமல் தமிழக அரசு காலம் கடத்தி வருகிறது என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குறிப்பிட்ட காலத்திற்குள் மாநில கவுன்சிலிங் நடத்தாவிட்டால், கிடைத்த வேறு மாநில வாய்ப்பையும் இழக்க நேரிடும் என அந்த மாணவர்கள் குமுறுகின்றனர்.

No comments:

Post a Comment

T.N. univerisities face financial crisis as UGC refuses to release funds: Appavu

T.N. univerisities face financial crisis as UGC refuses to release funds: Appavu The Hindu Bureau TIRUNELVELI 03.01.205 The universities in ...