Thursday, April 26, 2018

சித்ரா பவுர்ணமிக்கு தி.மலை : வாராந்திர ரயில்கள் தயார்

Added : ஏப் 26, 2018 04:02

திருவண்ணாமலை: 'சித்ரா பவுர்ணமி தினத்தன்று, திருவண்ணாமலை வழியாக, கடந்து செல்லும் வாராந்திர ரயில்களை, பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 சித்ரா பவுர்ணமியன்று, 29ல், காலை, 6:58 மணிக்கு துவங்கி, 30 காலை, 6:52 வரை, பவுர்ணமி திதி உள்ளது. இந்த நேரத்தில், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், கிரிவலம் செல்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக, திருவண்ணாமலை வழியாக செல்லும் வாராந்திர ரயில்களை பயன்படுத்தி கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.இதன்படி, தாதர் - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில்; ராமேஸ்வரம் - திருப்பதி; பாமணி எக்ஸ்பிரஸ் ரயில்; புதுச்சேரி - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.'

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்ரா பவுர்ணமியன்று, வி.ஐ.பி., கடித தரிசனத்துக்கு, அனுமதி இல்லை' என, கோவில் நிர்வாகம் அறிவித்துஉள்ளது.சித்ரா பவுர்ணமி திதி, வரும், 29 காலை, 6:58 மணி முதல், 30 காலை, 6:52 மணி வரையுள்ளது. வார விடுமுறை நாளான அன்று, பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பதால், அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய, கோவில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.வரும், 29 மற்றும், 30ல், அருணாசலேஸ்வரர் கோவிலில், அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம், முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களுக்கு, சிறப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும், 29 அன்று, இரவு நடை சாத்தப்படாமல், முழுவதும் திறந்திருக்க, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Holiday calling: Daily direct flights to Bangkok now

Holiday calling: Daily direct flights to Bangkok now Arvind.Chauhan@timesofindia.com 05.01.2025 Lucknow : To cater to the increasing rush fo...