Tuesday, April 17, 2018

சம்பளம் கொடுத்து சம்மர் டூர்.. கண்ணு போட்டுடாதீங்க ப்ளீஸ்! - 'ராஜா ராணி' ஷப்னம் 

அய்யனார் ராஜன்

vikatan  

நாள் தவறாம சீரியல் பார்த்துட்டு வர்றீங்களா, அப்ப உங்களுக்கு நிச்சயம் இந்தச் சந்தேகம் இருக்கும். அதெப்படி இப்ப எல்லா சீரியல்லயும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடுன்னு சீன் போயிட்டிருக்கு? ஆமாம். 'அழகு', 'ராஜாராணி' சீரியல்களின் யூனிட் இப்போதுதான் ஏற்காட்டில் ஷூட்டிங்கை முடித்து விட்டு வந்திருக்கிறார்கள். 'சரவணன் மீனாட்சி' தொடரின் ஷூட்டிங் கொடைக்கானல் சுற்று வட்டாரத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில சீரியல்கள் ஊட்டி, ஏலகிரி, கொல்லிமலை போன்ற இடங்களுக்குச் செல்லத் தயாராகி வருகிறார்கள். எப்படி?



''சென்னை வெயில்ல இருந்து தப்பிக்க ஓடறோம். சாதாரண மக்களைப் போலத்தான் ஆர்ட்டிஸ்டுகளும் வெயிலுக்கு எங்காச்சும் ஒதுங்கினாத் தேவலைன்னு நினைக்கிறாங்க. ஆனா ஸ்கூலுக்கு கோடை விடுமுறை விடற மாதிரி சீரியலுக்கு விட முடியுமா? சொல்லப் போனா, லீவு நாட்கள்ல பார்வையாளர்கள் அதிகமாகுறாங்க. நடிகர், நடிகைகள் எல்லாரும் சம்மர் டூர் போறோம்னு கிளம்பிட்டா ஷூட்டிங் எப்படி நடக்கும்? அதனாலதான், ஒரு ரெண்டு மாசத்துக்கு கதையை அந்த மாதிரி இடங்களுக்கு நகர்த்த வேண்டியிருக்கு'' என்கிறார் பெயரைக் குறிப்பிட விரும்பாத அந்த இயக்குநர்.




'ராஜா ராணி'க்காக ஒரு வாரம் ஏற்காட்டில் தங்கியிருந்து திரும்பிய ஷப்னத்திடம் கேட்டால், ''ஏதோ புரடியூசர் புண்ணியத்துல சம்பளமும் வாங்கிக்கிட்டு சம்மரையும் என்ஜாய் பண்ணிட்டிருக்கோம். ஜனங்களுக்கும் காட்சிகள் கண்ணுக்கு குளுமையா இருக்கு. கண்ணு போட்டு இதுக்கு வேட்டு வச்சிடாதீங்க' எனப் பதறுகிறார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024