Sunday, April 8, 2018

இந்தியருக்கு அடித்தது ஜாக்பாட்: துபாய் லாட்டரியில் ரூ.21 கோடி பரிசு; நண்பர்கள் 4 பேருடன் சரிசமமாகப் பகிர்ந்து கொள்கிறார்

Published : 07 Apr 2018 16:25 IST

பிடிஐதுபாய்




துபாயில் டிரைவராக பணியாற்றிவரும் இந்தியருக்கு அபுதாபி லாட்டரியில் ரூ.21 கோடி(1.2கோடி திர்ஹாம்) பரிசு கிடைத்துள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜான் வர்கீஸ். இவர் அபுதாபி நகரில் ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அபுதாபி விமான நிலையத்தில் லாட்டரி டிக்கெட் விற்பனை நடந்தது. அதில் ஜான் வர்கீஸ் ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார்.

அந்த லாட்டரி டிக்கெட்டிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் குலுக்கல் நடந்தது. அந்த குலுக்கலில் ஜான் வர்கீஸ் வாங்கி இருந்த லாட்டரி டிக்கெட்டுக்கு ரூ.21.20 கோடி(1.20 கோடிதிர்ஹாம்) பரிசு கிடைத்திருந்தது.

இது குறித்து ஜான் வர்கீஸ் தொலைபேசி வாயிலாக ‘கலீஜ் டைம்ஸ்’ நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு பரிசு கிடைத்து இருக்கிறது என்றவுடன் என்னால் நம்பமுடியவில்லை. என்னை ஏப்ரல் முட்டாள் ஆக்குகிறார்கள் என்று நினைத்து அந்த தொலைபேசி அழைப்பையும் பெரிதாக எடுக்கவில்லை. அது போலியான அழைப்பாக இருக்கும் என்று இருந்தேன். ஆனால், எனது நண்பர்கள் லாட்டரி அலுவலகத்துக்கு அழைத்து உறுதி செய் என்றனர். உறுதி செய்தபின்தான் எனக்கு பரிசு கிடைத்திருப்பது தெரியவந்தது.

எனது குடும்பத்தாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தேன். எனக்கு கிடைத்த இந்த பரிசுப் பணத்தை எனது நண்பர்கள் 4 பேருக்கு சரிசமமாக பிரித்துத் தர விரும்புகிறேன். இன்னும் நான் சாதாரண பட்டன் செல்போன் மட்டுமே பயன்படுத்தி வருகிறேன், அதை மாற்றி முதலில் ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும்.

எனக்கு இரு குழந்தைகள், ஒரு மனைவி என சிறிய குடும்பம் இருக்கிறது. என் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இந்த பணத்தை முதலீடு செய்வேன். அவர்களுக்கு சிறந்த கல்வியை கொடுப்பதைத் தவிர பெரிதாக வேறு ஏதும் இருக்க முடியாது என நினைக்கிறேன். நான் கடந்த காலங்களில் ஏராளமான துன்பங்களையும், பணமில்லாமல் சிரமப்பட்டு இருக்கிறேன். அதை ஒருபோதும் மறக்காமல், தேவைப்படுவோர்க்கு உதவுவேன்

இவ்வாறு வர்கீஸ் தெரிவித்தார்.

இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தில் இதேபோன்று ரூ.22 கோடி லாட்டரி மூலம் பரிசு கிடைத்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து அபுதாபியில் நடத்தப்பட்டலாட்டரி டிக்கெட்டி குலுக்கலில் இதுவரை 10 பேர் 10 லட்சம் திர்ஹாமுக்கு அதிகமாக வென்றுள்ளனர். அதில் 8 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...