Tuesday, April 24, 2018


வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகையை திருப்பித்தர வேண்டும்: ஏர்செல்லுக்கு டிராய் உத்தரவு
 
தினகரன் 

 
புதுடெல்லி: போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகையை திருப்பித்தர வேண்டும் என ஏர்செல் நிறுவனத்துக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது. கடனில் மூழ்கிய ஏர்செல் நிறுவனம், திவால் ஆனதாக அறிவிக்க கோரி தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் மனு செய்து, சேவையை நிறுத்திக்கொண்டது. ஏற்கெனவே டவர்கள் இயங்காததால் அவதிப்பட்டு வந்த வாடிக்கையாளர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர். வேறு நிறுவனங்களுக்கு மாற போர்ட் கோடு கிடைக்கவில்லை. இன்னமும் ஏராளமான ஏர்செல் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாற முடியாமல் திண்டா(டுகின்றனர்.

 போர்ட் கோடு பெற்று விண்ணப்பம் சமர்ப்பித்தவர்களில் பலர் வேறு நிறுவனங்களுக்கு மாறாமல் உள்ளனர். வங்கி கணக்கு போன்றவற்றுக்கு ஏர்செல் எண் கொடுத்திருந்த வாடிக்கையாளர்கள், ஒரு முறை பாஸ்வேர்டு பெற முடியாததால் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஈடுபட இயலவில்லை. பலர் வேறு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் புதிய எண் வாங்கி பயன்படுத்த தொடங்கி விட்டனர். இதுபோல் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு டெபாசிட் தொகையை நிறுவனம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், ஏர்செல் நிறுவனத்துக்கு டிராய் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: போஸ்ட் பெய்டு உபயோகித்து வந்த ஏர்செல் வாடிக்கையாளர்கள் பலர், தங்களது டெபாசிட் தொகையை நிறுவனம் திருப்பித்தரவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.

 போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் டெபாசித் செய்த தொகையை இந்த மாதம் 30ம் தேதிக்குள் திருப்பித்தர வேண்டும். டிசம்பரில் இருந்து மார்ச் 10ம் தேதிக்குள் பிற நிறுவனங்களுக்கு மாறியவர்களின் பட்டியலை வழங்க வேண்டும். இதுபோல் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் பலர் ரீசார்ஜ் செய்த தொகையை இழந்துள்ளனர். எனவே, பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாத தொகை விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்தியதற்கான விவரங்களை மே 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

‘Case over wedding invite with Modi message reckless’

‘Case over wedding invite with Modi message reckless’  TIMES NEWS NETWORK 27.12.2024 Bengaluru : The high court quashed proceedings against ...