Wednesday, April 11, 2018


பாம்பு விஷமுள்ளதா? விஷமற்றதா? எளிதாகக் கண்டறிய டிப்ஸ்!


By RKV | Published on : 11th April 2018 05:29 PM |



புறநகர் பகுதிகளில் வீடு கட்டிக் கொண்டு குடி புகுந்து புதிதாக செட்டிலாகி இருக்கிறீர்களா? வீடுகள் நெருக்கமாக இல்லாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக புதர் மாதிரியாக கருவேல மரங்களும், பார்த்தீனியங்களுமாக நிறைந்து போய் ஏரியாவே ஏதாவது காட்டுக்குள் குடியேறியதைப் போன்ற உணர்வைத் தருகிறதா?! அங்கே குடியிருப்பதற்கு உங்களுக்கு சில பயங்களும், பீதிகளும் இருக்கலாம். திருட்டு முதல் பீதியாக இருந்தாலும் அதைக்கூட வாட்ச்மேன், செக்யூரிட்டு என்று சமாளித்து விடுவீர்கள். ஆனால் இந்தப் பாம்புப் பயம் இருக்கிறதே அதை மட்டும் யாரை வைத்தும் நம்மால் சமாளிக்க முடியாது. பாம்பு மட்டும் யதேச்சையாக துரதிர்ஷ்டவசத்தில் நம் கண்ணில் பட்டு விட்டால் போச்சு! ஒன்று அந்தப் பாம்பு அடித்துக் கொல்லப்பட்டே ஆக வேண்டும் அல்லது நாம் தினம் தினம் அதைக் குறித்த பயத்தில் செத்து செத்துப் பிழைத்துக் கொண்டிருப்போம். இந்தத் தொல்லையெல்லாம் எதற்கு? ஒரு பாம்பு உங்கள் கண்களில் தட்டுப்பட்டு விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைப் பார்த்த மாத்திரத்தில் உங்களால் அது விஷமுள்ள பாம்பா அல்லது விஷமற்ற பாம்பா? என்று கண்டறியத் தெரிந்து விட்டால் பிறகு அதைக் கொல்வதா? வேண்டாமா? என்று முடிவெடுத்து விடலாமில்லையா? முடிவெடுப்பது கூட அப்புறம் தான். முதலில் உங்கள் கண்ணில் பட்ட பாம்பு விஷமற்றது என்று தெரிந்தால் உள்ளே நிம்மதியாக உணர்வோமே! அது தான் முக்கியம்.



விஷமுள்ள பாம்பு எனில் கண்கள் நீள்வட்டமாக இருக்கும், மூக்குத்துவாரத்தோடு சேர்த்து அதற்கு சற்றுக் கீழே ஒரு எக்ஸ்ட்ரா துளையும் இருக்கும். வால் பகுதியில் உடலின் அடிப்பாகத்தில் வரிகள் ஒரே வரிசையாக இருக்கும்.



விஷமற்ற பாம்பு எனில் கண்கள் வட்டமாக இருக்கும். மூக்குத்துவாரம் மட்டுமே இருக்கும். எக்ஸ்ட்ரா துளை தென்படாது, வால் பகுதியில் உடலின் அடிப்பாகத்தில் வரிகள் இரண்டு வரிசையாகத் தொடர்ந்து முடிவடையும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024