Saturday, April 14, 2018

இரக்கமில்லா அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்; மனநலம் குன்றிய மகனை தந்தையுடன் நடுரோட்டில் இறக்கிவிட்ட கொடூரம்: மனித உரிமை ஆணையம் சம்மன்

Published : 13 Apr 2018 21:02 IST

சென்னை



தந்தை மகன், அரசு பேருந்து- சித்தரிக்கப்பட்ட படம்

மனநலம் குன்றிய இளைஞரையும், தந்தையையும் மருத்துவச் செலவுக்கு வைத்திருந்த பணம், சான்றிதழைப் பிடுங்கி நடு சாலையில் இறக்கிவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

மதுரை திருமங்கலத்தை அடுத்த சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் மாரிச்சாமி (54). இவரது மகன் முத்துக்குமார் (23) மனநலம் குன்றியவர். அவருக்கு மதுரையில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறார். வசதி இல்லாததால் அரசுப் பேருந்தில் மகனை சிகிச்சைக்கு அழைத்துச் செல்வார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் வழக்கம் போல் மனநலம் குன்றிய தன் மகன் முத்துக்குமாரை மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, விருதுநகர் மீனாம்பிகை பங்களா பஸ் நிறுத்தத்தில் இருந்து, விருதுநகர் கோட்ட அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார்.

பேருந்து புறப்பட்டு சென்றுகொண்டிருந்தபோது நடத்துநர் டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது மாரிச்சாமி மாற்றுத் திறனாளியான மகன் முத்துக்குமாருக்கும், அவருக்கு துணையாக செல்பவருக்கும் இலவசப் பயணம் செய்வதற்கான அரசு அளித்த சான்றிதழைக் காட்டியுள்ளார் .

இதைப்பார்த்து ஆத்திரமடைந்த நடத்துநர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். சான்றிதழை ஏற்க மறுத்துள்ளார், நடத்துநரின் செயலைச் சொல்லி ஓட்டுநரிடம் மாரிச்சாமி முறையிட்டுள்ளார். ஆனால் ஓட்டுநரும், 'ஒழுங்காக டிக்கெட் எடு இல்ல இறங்கிப் போயிடு' என்று மிரட்டியுள்ளார்.

ஆனால், 'தன்னிடம் சிகிச்சைக்கு மட்டுமே பணம் உள்ளது, அரசு அளித்த இலவசப் பயணச் சான்றிதழ் இருக்கும்போது நான் ஏன் டிக்கெட் எடுக்கவேண்டும்?' என்று மாரிச்சாமி கேட்டுள்ளார்.

'சட்டமா பேசுகிறாய்' என்று மாரிச்சாமியிடம் இருந்த சான்றிதழ் மற்றும் சிகிச்சைக்கு வைத்திருந்த ரூ. 6 ஆயிரத்து 570 ரூபாய் பணத்தையும் பறித்துக்கொண்டு பேருந்து நிறுத்தம் இல்லாத இடத்தில் மனநலம் குன்றிய மகனையும், அவரது தந்தையையும் இரக்கமில்லாமல் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர்.

இந்தச் செயலைப் பேருந்தில் இருந்த பயணிகளும் தட்டிக்கேட்கவில்லை. கையில் பணம் இல்லாமல் மனநலம் குன்றிய மகனுடன் நட்டநடு சாலையில் இறக்கிவிடப்பட்ட மாரிச்சாமி சில நல்ல உள்ளங்கள் உதவியதால் ஊர் வந்து சேர்ந்துள்ளார்.

தனக்கு நேர்ந்த அவமானம் மற்றும் மனிதாபிமானமற்ற ஓட்டுநர், நடத்துநர் செயல் குறித்து மாரிச்சாமி தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரை விசாரித்த மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயசந்திரன், அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் விருதுநகர் அரசுப் போக்குவரத்துக் கழகஹ் ட்துணை மேலாளர் ஆகியோரை ஏப்ரல் 25-ம் தேதி நேரில் ஆஜராகும்படி, சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

PG med counselling ’24, after delay, from Nov 8

PG med counselling ’24, after delay, from Nov 8  TIMES NEWS NETWORK 02.11.2024 Chennai : PG medical counselling for 2024, which faced signif...