Saturday, May 5, 2018

தாயின் கம்மலை அடகு வைத்து நீட் தேர்வுக்கு கேரளா செல்லும் ஏழை மாணவி..!
எம்.திலீபன்

vikatan  05.05.2018

நீட் தேர்வை எழுதுவதற்காகத் தாயின் கம்மலை அடகு வைத்து விட்டு எர்ணாகுளம் செல்கிறார் அரியலூர் மாணவி ஹேமா. பேருந்து நிலையத்திற்கே தனியாக செல்லாத நான் எப்படி வெளிமாநிலத்திற்குச் சென்று தேர்வை எழுதப் போகிறேன் என்று தெரியவில்லை எனப் புலம்புகிறார் ஏழை மாணவி.



தமிழகத்தில் நீட் தேர்வு எழுத திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மட்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீட் தேர்விற்கான மையங்கள் வெளி மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகப் புகார் செய்யப்பட்டது. இதில் நீட் தேர்விற்காக ஒதுக்கப்பட்ட மையங்களில் தான் நீட் தேர்வு எழுத வேண்டும் என உச்சநீதிமன்றத் உத்தரவிட்டதையடுத்து வெளிமாநிலத்தில் நீட் தேர்விற்கான பயிற்சி மையங்கள் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் தற்போது வெளிமாநிலங்களுக்கு சென்று கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் தவுத்தாய்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஹேமா. இவருக்கு 3 தங்கைகள் உள்ளனர். அப்பா, அம்மாவும் தினம் வேலைக்குச் சென்று தான் தங்களுடைய வாழ்வாதாரத்தை நடத்திவருகின்றனா். இவருக்கும் கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்கு கடும் மன உளைச்சலுடன் எர்ணாகுளம் புறப்பட்டுக்கொண்டிருந்த மாணவி ஹேமாவிடம் பேசினோம்., ”நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கடந்தாண்டு போராடினார்கள். ஆனால் இவ்வாண்டு நீட் தேர்வை இங்கு நடத்துங்கள் என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள். இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

நீட் தேர்விற்கு ஆன்லைனில் அப்ளை செய்யும் போது முன்னுரிமை மையமாகத் தமிழகத்தில் உள்ள மையங்களைத்தான் குறிப்பிட்டேன். ஆனால் எங்களுக்குக் கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. நடுத்தர குடும்பத்தில் பிறந்த நான் அறிமுகமில்லாத, தெரியாத மொழி பேசக்கூடிய நகரில் தேர்வு எழுதச் செல்வது எனக்குள் ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்.

எனக்கு எர்ணாகுளத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் தேர்வு மையம் ஒதுக்கியிருக்கிறார்கள். நான் தனியாக அரியலூர் பேருந்து நிலையத்திற்கே செல்லாதவள். ஆனால் எர்ணாகுளம் எப்படி செல்லப்போகிறேன் என்றுதெரியவில்லை, அதுமட்டுமில்லாமல், எங்கள் அப்பா அம்மா ஊர் உலகம் தெரியாது. அவர்களை அழைச்சிட்டு எப்படி போகப்போகிறேன் தெரியவில்லை. இவ்வளவு பிரச்னைகள் மத்தியில் என்னுடைய அம்மாவின் கம்மலை அடகு வைத்துவிட்டுத் தேர்வு எழுதச் செல்கிறேன். என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை என்று ஆதங்கத்தோடு முடித்தார்.




 அவரைத் தொடர்ந்து அவரது பெற்றோர்கள் கூறும் போது., ”தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் படிக்க வைப்பதே மிகவும் கஷ்டமாக உள்ளது. இந்நிலையில் நீட் தேர்வை எதிர்கொள்ள பயிற்சி மையங்களில் சேருவதற்கு அதிகளவில் பணம் செலவு செய்துள்ளோம். ஆனால் தற்போது தேர்வு எழுதச் செல்லவும் செலவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எர்ணாகுளத்திற்கு செல்லச் செலவிற்கு பணம் இல்லாமல் அணிந்திருந்த தோடை அடகு வைத்து அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு தான் செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம் எனக் கூறினார்.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...