Tuesday, January 13, 2015

வித்தியாசமான தலைப்பில் கவுண்டமணியின் புதிய படம்!

'வாய்மை' படத்தில் கவுண்டமணி.

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கவுண்டமணி கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.

பின்னர் ' வாய்மை ', ‘49 ஓ’ என்ற படங்களின் மூலம் கவுண்டமணி மீண்டும் நடிக்கவந்தார். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற புதிய படத்தில் நடிக்க கவுண்டமணி ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குநர் சுசீந்திரனிடம் உதவியாளராக இருந்த கணபதி பாலமுருகன் இந்தப் படத்தை இயக்குகிறார். முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக உள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் பயன்படுத்தும் கேரவனை வாடகைக்கு விடும் தொழிலதிபர் கதாபாத்திரத்தில் கவுண்டமணி நடிக்கிறார் .

சென்னையில் இருந்து மதுரை வரை செல்லும் பயணத்தின் சுவாரஸ்ய சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஜெயராம் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஜெ. சண்முகம் இப்படத்தைத் தயாரிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

சென்னை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024