Friday, April 27, 2018

'நீட்' மையம் விவகாரம் சி.பி.எஸ்.இ.,க்கு உத்தரவு

Added : ஏப் 27, 2018 01:14

சென்னை, 'நீட்' எனும், தேசிய தகுதி நுழைவு தேர்வை எழுத, தொலை துாரங்களில் மையங்களை ஒதுக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கில், சி.பி.எஸ்.இ., இயக்குனர் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வழக்கறிஞர், காளிமுத்து மைலவன் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த பலருக்கு, வேறு மாநிலங்களில், தேர்வுக்கான மையம் ஒதுக்கப் பட்டுள்ளது. திருநெல்வேலி, துாத்துக்குடி, திருச்சி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு, கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிலருக்கு, ராஜஸ்தான் மாநிலத்தில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, தொலை துாரங்களில் மையங்கள் ஒதுக்குவதால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு, அவர்கள் வசிப்பிடத்தின் அருகில் உள்ள மையங்களை ஒதுக்கும்படி,உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள், எச்.ஜி.ரமேஷ், தண்டபாணி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, சி.பி.எஸ்.இ., இயக்குனருக்கு உத்தரவிட்டு, விசாரணையை, இன்றைக்கு தள்ளி வைத்தது.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...