Friday, April 27, 2018

டாக்டர் கணேசன் நூலிற்கு தமிழக அரசு விருது

Added : ஏப் 26, 2018 22:57

ராஜபாளையம், ராஜபாளையம் டாக்டர் கு.கணேசன் எழுதிய நுாலிற்கு, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை சார்பில், சிறந்த நுால் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ராஜபாளையம் மருத்துவ எழுத்தாளர் கு.கணேசன், எளிய தமிழில் மருத்துவ அறிவியல் கட்டுரைகள், உடல்நலன் சார்ந்த கட்டுரைகள் எழுதி வருகிறார்.இதற்காக மத்திய அரசின், தேசிய அறிவியல் தொழில் நுட்பத் தொடர்பியல் விருது, இந்திய மருத்துவ கழகம் வழங்கிய எழுத்துச் சாதனையாளர் விருது, இலக்கிய பீடம் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். தற்போது,இவர் எழுதிய 'நம் ஆரோக்கியம் நம் கையில்' எனும் நுாலிற்கு, தமிழக அரசின் 2015 ம் ஆண்டிற்கான சிறந்த நுால் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்விருது சென்னை தரமணியில் அமைந்துள்ள தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அரங்கத்தில் ஏப். 29ல் நடக்கும் விழாவில் வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...