Sunday, April 8, 2018

கை நிறைய சம்பளம் பெற சி.ஏ., படிப்பு

Added : ஏப் 08, 2018 01:14

சென்னை:''எதிர்காலத்தில், அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பை பெற, சி.ஏ., உள்ளிட்ட, 'ஆடிட்டிங்' படிப்புகளை படிக்கலாம்,'' என, ஆடிட்டர் சேகர் தெரிவித்தார்.

'தினமலர் - வழிகாட்டி' நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:பிளஸ் 2 முடித்த பின், மாணவர்களிடமும், பெற்றோரிடமும், எந்த படிப்பில் சேர்ந்தால், கை நிறைய சம்பளத்துடன் நல்ல வேலைவாய்ப்பு பெற முடியும் என்ற, எதிர்பார்ப்பு உள்ளது. இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற, எந்த படிப்பை படித்தாலும், கடுமையாக உழைக்க வேண்டும். அதிலும், சி.ஏ., - ஐ.சி.டபிள்யூ.ஏ., மற்றும் ஏ.சி.எஸ்., படிப்புகளை தேர்வு செய்தால், ஐந்து ஆண்டுகள் கடினமாக உழைக்க வேண்டும்.

சி.ஏ., உள்ளிட்ட ஆடிட்டிங் படிப்புகளை, மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பு நடத்துகிறது. இந்த படிப்புகளுக்கு, தனியாக கல்லுாரிகளோ, பல்கலைகளோ கிடையாது. ஆனால், அரசு மற்றும் தனியார் பயிற்சி மையங்கள் உள்ளன. அரசின் பயிற்சி மையம் என்றால், ஐந்து ஆண்டுக்கும், 70 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். தனியார் மையம் என்றால், 2.5 லட்சம் வரை செலவாகும்.இவ்வாறு சேகர் பேசினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024