Saturday, May 5, 2018

'நிர்பயா' வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

Added : மே 04, 2018 22:20

புதுடில்லி: 'நிர்பயா' வழக்கில், மரண தண்டனை பெற்ற நான்கு குற்றவாளிகளில், இரண்டு பேர், தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்படி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை, உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது. டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012ல், ஆறு பேரால், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். அதில், ராம் சிங் என்பவன், திஹார் சிறையில் தற்கொலை செய்தான். மற்றொரு குற்றவாளிக்கு, 18 வயது பூர்த்தி ஆகாததால், சிறுவர் சீர்திருத்த பள்ளியில், மூன்றாண்டுகள் அடைக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டான்.இந்நிலையில், முகேஷ், 29, பவன் குப்தா, 22, வினய் சர்மா, 23 மற்றும் அக் ஷய்குமார் சிங், 31, ஆகியோருக்கு, டில்லி உயர் நீதிமன்றம், மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.தீர்ப்பை மறு பரிசீலனை செய்யும்படி, வினய் சர்மா, பவன் குப்தா சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை, நீதியின் பெயரால் நிகழ்த்தப்படுகிற படுகொலை' என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, இரு தரப்பு வழக்கறிஞர்களும், தங்கள் தரப்பு வாதத்தை அடுத்த வாரம், எழுத்து மூலம் சமர்ப்பிக்கும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.அதுவரை, இந்த மனு மீதான உத்தரவை, ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...