நீட் தேர்வு - பின்னுக்குத் தள்ளப்பட்ட தமிழகம்; ஆறுதல் அளித்த மாணவி கீர்த்தனா
நீட் தேர்வு எழுதியவர்களில் தமிழகத்தில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.
மருத்துவ படிப்புக்கான
நீட் தேர்வு நாடு
முழுவதும் கடந்த மே 6-ம் தேதி நடைபெற்றது. இந்தியா முழுவதும் தேர்வு
எழுதிய 13,26,725 பேரில் 7,14,598 பேர் கவுன்சலிங்குக்குத்
தகுதி பெற்றுள்ளதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. தமிழக மாணவர்கள் 1,14,602
பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பீகாரைச் சேர்ந்த கல்பனா குமாரி என்னும் மாணவி 691/720 மதிப்பெண் பெற்று
தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தெலங்கானைவை சேர்ந்த ரோஹன்
புரோஹித் என்னும் மாணவர் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மூன்றாவது,
நான்காவது இடங்களை டெல்லியைச் சேர்ந்த மாணவர்கள் பிடித்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா என்னும் மாணவி தேசிய
அளவில் 12வது இடத்தைப்
பிடித்துள்ளார்.
மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தில் 74% பெற்று ராஜஸ்தான் முதலிடம்
பிடித்துள்ளது. தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதியவர்களில் 39.55%
மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம் பின்னுக்குத் தள்ளப்பட்டு 35வது
இடத்தில் உள்ளது. ராஜஸ்தானில் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
டெல்லி இரண்டாவது இடத்திலும் ஹரியானா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
No comments:
Post a Comment