Tuesday, June 5, 2018

நீட் தேர்வு தோல்வி..! தற்கொலை செய்து கொண்ட மாணவி 

கார்த்திக்.சி

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா என்பவர் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.



2018-ம் ஆண்டின் மருத்துவப் படிப்பின் நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதில், இந்தியா முழுவதும் தேர்வு எழுதிய 13,26,725 பேரில் 7,14,598 பேர் கவுன்சலிங்குக்குத் தகுதி பெற்றுள்ளதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. தமிழக மாணவர்கள் 1,14,602 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தநிலையில், நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் விழுப்புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரதீபா என்ற என்பவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கூலித் தொழிலாளியின் மகளான அவர் 12 வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்தவர். நேற்று, வந்த நீட் தேர்வு முடிவில் அவர் 39 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. அந்த விரக்தியில் அவர் நேற்று தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர், கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருந்தார். அந்த மதிப்பெண்ணைக் கொண்டு தனியார் மருத்துவமனையில்தான் சேருவதற்கான வாய்ப்பு இருந்த நிலையில், பணம் இல்லாத காரணத்தால் அப்போது மருத்துவத்தில் சேரவில்லை. ஏற்கெனவே, நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தினால் அரியலூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில் தற்போது விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024