Wednesday, June 13, 2018

ரயிலில் சிறுமியிடம் சில்மிஷம் : டி.டி.ஆர்., சஸ்பெண்டு

Added : ஜூன் 12, 2018 20:38

வேலுார்: ரயிலில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த போது பிடிபட்டு, சிறையில் அடைக்கப்பட்ட டி.டி.ஆர்., சஸ்பெண்டு செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த தம்பதியினர், 6 வயது மகளுடன், ஊட்டிக்கு சுற்றுலா சென்று, சென்னை திரும்பினர். கடந்த 3ம் தேதி இரவு, சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தனர். மறுநாள், அதிகாலை, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே, ரயில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, ரயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகர், அனிஷ்குமார், 25, துாங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.சிறுமி திடீரென எழுந்து சத்தம் போட்டதால், அவரது பெற்றோர் மற்றும் சக பயணியர், அனிஷ்குமாரை பிடித்து, சரமாரியாக அடித்து உதைத்தனர். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசில், அனிஷ்குமாரை ஒப்படைத்தனர்.வழக்கு பதிவு செய்து, டிக்கெட் பரிசோதகர், அனிஷ்குமாரை கைது செய்த ரயில்வே போலீசார், அவரை, திருப்பத்தூர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், டிக்கெட் பரிசோதகர் அனிஷ்குமாரை, சஸ்பெண்டு செய்து, சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர், விஜூவின் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024