சைக்கிளிள் வந்து பொறுப்பேற்றார் மத்திய சுகாதார துறை அமைச்சர்
Added : ஜூன் 03, 2019 23:01
புதுடில்லி : மத்திய சுகாதார துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள, பா.ஜ.,வைச் சேர்ந்த, ஹர்ஷ்வர்தன், நேற்று, தன் அலுவலகத்துக்கு, சைக்கிளில் வந்து பொறுப்பேற்றார்.
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், டில்லி, சாந்தினி சவுக் தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், ஹர்ஷ்வர்தன், 64. இவர், முந்தைய ஆட்சியில், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் நில அறிவியல் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
இந்நிலையில், ஹர்ஷ்வர்தனுக்கு, இந்த முறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வழங்கப்பட்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் நில அறிவியல் துறையும், இவருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சுகாதார துறை அமைச்சராக, ஹர்ஷ்வர்தன், நேற்று பொறுப்பேற்றார். இதற்காக, டில்லியில் உள்ள அலுவலகத்துக்கு, அவர் சைக்கிளில் வந்தார். இதைப் பார்த்த பலரும் ஆச்சரியம் அடைந்தனர்.
இது குறித்து, அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது: ஜூன், 3ம் தேதியை, உலக சைக்கிள் தினமாக, ஐ.நா., அறிவித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு இழைக்காத, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும், சிக்கனமான சிறந்த பயணம் என்றால், அது சைக்கிள் பயணம் மட்டும் தான். சைக்கிள் ஓட்டுவது, எனக்கு மிகவும் பிடிக்கும். இனி அடிக்கடி அலுவலகத்துக்கு சைக்கிளில் வர முடிவு செய்துள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:
Post a Comment