Saturday, April 1, 2017


உ.பி., முதல்வர் நடவடிக்கையால்  'மிஸ்டர் கிளீன்' ஆன அலுவலர்கள்

லக்னோ:உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் அதிரடி உத்தரவுகளால், அரசு அலுவல கங்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிகாரிகள்,ஊழியர்கள்,அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு வருவதோடு, எந்த கோப்பு களும் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் தேக்கம் அடையாத வகையில் பணியாற்ற துவங்கியுள்ளனர்.




உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப் பேற்று, 15 நாட்கள் கூட ஆகாத நிலையில், அரசு அலுவலகங்களில் முன் எப்போதும் இல் லாத வகையிலான மாற்றங்கள் தென்படுவ தாக, பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் உடனுக்குடன் அதிகாரிகளின் பார்வைக்கு   கொண்டு செல்லப்பட்டு, தங்கள் கோரிக்கை களுக்கு தீர்வு கிடைப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:

மாநில அரசு அலுவலகங்களில் ஊழியர்களோ, அதி காரிகளோ சரியான நேரத்திற்கு பணிக்கு வந்ததாக வரலாறு கிடையாது. ஆனால், முதல்வர் ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பின், நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களிலும், காலை, 9:30 மணிக்கே அனைவரும் வந்து விடுகின்றனர். மாலை எவ்வளவு நேரம் ஆனாலும், அன்றைய பணியை முடிக்காமல், யாரும் வீட்டிற்கு செல்வதில்லை.

பல மாதங்களாக கிடப்பில் இருந்த கோப்புகள் கூட வேகமாக நகர்கின்றன. புதிதாக தரப்படும் கோரிக்கை மனுக்கள், விண்ணப்பங்கள் உடனுக் குடன் சரிபார்க்கப்பட்டு பிரச்னைக்கு தீர்வு காணப் படுகிறது.இவ்வாறுஅவர்கள் கூறினர்.

அரசு அலுவலகங்களில், பான் மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து, அரசு ஊழியர்கள் சிலர் கூறியதாவது:

அரசு அலுவலகங்களில் பான் மசாலா மெல் வதற்கு விதிக்கப்பட்ட தடையால், சக ஊழியர் கள் பலரும், பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி யுள்ளனர். பல

ஆண்டு பழக்கத்தை ஒரே நாளில் நிறுத்த முடியாததால், அவர்கள், சூவிங்கம் உள்ளிட்ட பொருட்களை மெல்கின்ற னர். எனினும், நல்ல விஷயங்களை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தற்போது, சரியான நேரத்திற்கு முன்பாகவே அலுவலகம் வராவிட்டால், வாகனங்களை நிறுத்த கூட இடம் கிடைப்பதில்லை. அனைத்து ஊழியர்களும் முன்கூட்டியே அலுவலகம் வந்து விடுவதால், அலுவல் பணிகளும் சரியாக நடக்கின்றன.

இது, உ.பி.,யில் நிகழ்ந் துள்ள மிகப் பெரிய மாற்றம் என்பதை மறுக்க முடியாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024