Saturday, April 1, 2017


 விமான டிக்கெட் கிடைக்காமல் அல்லாடும் சிவசேனா எம்.பி.,

 மும்பை: 'ஏர் இந்தியா' நிறுவனத்தால், விமான பயணம் செய்ய தடை விதிக்கப்பட்ட சிவசேனா எம்.பி., ரவீந்திர கெய்க்வாட், வெவ்வேறு வழிகளில், விமான டிக்கெட் பெற முயன்று வரும் தகவல் வெளியாகியுள்ளது.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, சிவசேனா எம்.பி.,யான ரவீந்திர கெய்க்வாட், சமீபத்தில், ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார்; இருக்கையை மாற்றிக் கொடுத்தது தொடர்பாக, விமான நிறுவன ஊழியரை, ரவீந்திர கெய்க்வாட் செருப்பால் அடித்தார். இதையடுத்து, ரவீந்திர கெய்க்வாட் உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது.ஆனால், கெய்க்வாட் விடாமல், தொடர்ந்து டிக்கெட் பெற, வெவ்வேறு வழிகளில் முயன்று வருகிறார்.

 சில தினங்களுக்கு முன், மும்பையில் இருந்து, டில்லி செல்ல, அவரது உதவியாளர் மூலம் விமான டிக்கெட் பெற தொடர்பு கொண்டுள்ளார்; எனினும், ரவீந்திர கெய்க்வாட் பெயரை கேட்ட உடனேயே, ஊழியர்கள், 'டிக்கெட் வழங்க முடியாது' என தெரிவித்து விட்டனர்.இதை தொடர்ந்து, ஐதராபாத்தில் இருந்து டில்லி செல்ல, பேராசிரியர் ரவீந்திர கெய்க்வாட் என்ற பெயரில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்; ஆனால், ஏர் இந்தியா ஊழியர்கள், அதை பரிசீலனை செய்தபோது, டிக்கெட்டை ரத்து செய்து விட்டனர்.மூன்றாம் முறையாக, நாக்பூரில் இருந்து டில்லி செல்ல, ஏஜன்டுகள் மூலம், டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்; அப்போதும், 'ரவீந்திர கெய்க்வாட் என்ற பெயருக்கு டிக்கெட் கிடைக்காது' என ஏஜன்டுகள் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024