Sunday, April 1, 2018

நாளை முதல் தாஜ்மகாலை ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் மட்டுமே பார்வையிட அனுமதி!

By DIN | Published on : 31st March 2018 07:30 PM  |


ஆக்ரா: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை நாளை முதல் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் மட்டுமே பார்வையிட அனுமதி அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்று இந்தியாவின் தாஜ்மகால். காதலின் சின்னமான இது அனைத்து தரப்பையும் ஈர்த்து வருகிறது. தாஜ்மகாலை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு தொடர்ச்சியாக வருகை புரிகின்றனர்.

தாஹ்மஹாலுக்கு ஆண்டிற்கு சராசரியாக 80 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்வதாக சுற்றுலாத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தாஜ்மஹாலை பார்வையிட தினமும் சுமார் 50,000 சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இவர்களில் 5 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி இலவசம். இந்தியர்களுக்கும், வெளிநாட்டினருக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்ட போதிலும், நேரக்கட்டுப்பாடு என்பது இல்லை.

இந்நிலையில் தாஜ்மகாலை நாளை முதல் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் மட்டுமே பார்வையிட அனுமதி அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ச்சியாக வரும் பார்வையாளர்களினால் உண்டாகும் மாசுக் கட்டுப்பாட்டில் இருந்து தாஜ்மஹாலை பாதுகாக்கும் வகையில், இவ்வாறு பார்வையாளர்களை அனுமதி நேரத்தில் மாற்றம் கொண்டு வர அதனைப் பாதுகாத்து வரும் தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி ஏப்ரல் 1-ம் தேதி முதல் தாஜ்மஹாலை பார்வையிட 3 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படும். மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் சுற்றி பார்க்க விரும்புபவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என்றும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் தொல்லியல் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024