Saturday, May 5, 2018

பாஸ்வேர்டை மாற்ற பயனாளர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் பரிந்துரை

2018-05-04@ 10:09:22



சான் பிரான்சிஸ்கோ: டுவிட்டர் பயன்படுத்துபவர்கள் தங்கள் கணக்கின் பாஸ்வேர்டை உடனடியாக மாற்றும்படி அந்த நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. 330 மில்லியன் பயனாளர்களை கொண்ட டுவிட்டர் வலைதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயனாளர்களின் பாஸ்வேர்டுகள் அந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப புலம் ஒன்றில் சேமிக்கப்பட்டுள்ளது. இந்த பாஸ்வேர்டுகள் அனைத்தும் டுவிட்டரில் பணி புரியும் ஊழியர்களுக்கு தெரிந்துவிட்டது.

தொழில்நட்ப கோளாறுகளை சரிசெய்துவிட்டதாக தெரிவித்துள்ள டுவிட்டர் நிறுவனம், பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து பயனாளர்களும் உடனடியாக தங்கள் கணக்கின் பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளுமாறு பரிந்துரை செய்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள கோளாறு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ள டுவிட்டர் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று உறுதியளித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024