Thursday, May 17, 2018

சென்ற ஆண்டைவிடக் குறைவான தேர்ச்சி பெற்ற சிவகங்கை கல்வி மாவட்டம்!

பாலமுருகன். தெ

சிவகங்கை மாவட்டத்தில் 15,917 பேர் தேர்வு எழுதியதில் 15,216 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 6,976 மாணவர்கள் தேர்வு எழுதி 6,558 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் 94.01 ஆகும். மாணவிகள் 8,941 பேர் தேர்வெழுதி 8,658 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.83 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிவகங்கை கல்வி மாவட்டத்தைப் பொறுத்தவரை சென்ற கல்வி ஆண்டைவிட இது குறைவான தேர்ச்சி ஆகும்.

சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆகாஷ் ராஜாலிங்கம் 1179 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இதே பள்ளி மாணவி சுகிபிரபா 1160 மதிப்பெண்ணும், மாணவர் பாலமுருகன் 1151 மதிப்பெண்ணும் எடுத்துள்ளனர். சாம்பவிகா பள்ளியில் 332 மாணவர்கள் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் முதன்மை பெற்ற மாணவ, மாணவிகளை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி தாளாளர் சேகர் பாராட்டினார். இதேபோல் சிவகங்கை ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் பள்ளியின் மாணவி ஆயிசா 1172 மதிப்பெண்ணும், யமுனாஸ்ரீ 1162 மதிப்பெண்ணும் எடுத்துள்ளனர். ஸ்ரீரேஸ்மி 1162 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இப்பள்ளி மாணவர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

மாவட்டத்தில் 63 அரசுப் பள்ளி உட்படப 148 பள்ளிகள் 95.60 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 63 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 6014 பேர் மாணவர்கள் தேர்வு எழுதியதில், 5604 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் சதவிகிதம் 93.18 ஆகும். அரசுப்பள்ளிகள் 64-ல் 14 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகள் 36-ல் 11 , 48 சுயநிதிப்பள்ளிகளில்29 பள்ளிகள் ஆக மொத்தம் 148 பள்ளிகளில் 54 பள்ளிகளில் மாணவர்கள் 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

HC orders govt to appoint 292 auxiliary nurses

HC orders govt to appoint 292 auxiliary nurses  TIMES NEWS NETWORK  6.11.2024  Bhopal/Jabalpur : In a significant judgement, a division benc...