ஜியோ போஸ்ட்பெய்டு: என்னவெல்லாம் இருக்கிறது?
இந்தியாவின் தொலைத்தொடர்பு சந்தையின் இன்னொரு பிரிவை நோக்கி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் முதல் படியாக, புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். அனைத்து ஜியோ திட்டங்களுடனும் கிடைக்கவுள்ள இலவச வாய்ஸ் கால்ஸ், SMS மற்றும் ஜியோ அப்ளிகேஷன்களுக்கு பிரீமியம் சந்தாக்கள் இந்த போஸ்ட்பெய்டு திட்டத்திலும் கிடைக்கவுள்ளன. இந்தத் திட்டத்திற்கான சந்தா மே 15லிருந்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்தின் குறைந்தபட்ச திட்டம் ஒரு மாதத்திற்கு 309 ரூபாய்.
ஜியோ போஸ்ட்பெய்டில் வாடிக்கையாளர்கள் சிம்கார்டை ஆக்டிவேட் செய்தவுடன் அனைத்து வசதிகளும்; அதாவது வாய்ஸ் கால், இணைய சேவை, எஸ்எம்எஸ், சர்வதேச அழைப்புகள் ஆகியவை முன்கூடியே செயல்பாட்டில் இருக்கும்.
இதற்காக வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிப் பயனர்களின் வேலைப்பளுவைக் குறைத்திருக்கின்றனர். வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்காகப் புதிய ரோமிங் வசதியையும், திட்டத்தையும் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் எந்தச் சேவையையும் பெற்றுக்கொண்டு, ஜியோ சேவைக்கு மாறிக்கொள்ள முடியும். மேலும் இந்தத் திட்டத்தின் கூடுதல் அம்சமாகத் தானியங்கி பணம் செலுத்தும் முறையுடன் வருகிறது. இதில் ஒவ்வொரு மாதம் முடிவிலும் அந்த மாதத்தின் பில் இ-மெயில் முலம் அனுப்பப்படும்.
சர்வதேச அழைப்புகளுக்கு அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு 50 பைசா சீனா, பிரான்ஸ், இத்தாலி, நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றிற்கு நிமிடத்திற்கு 2 ரூபாய். ஹாங்காங், இந்தோனேசியா, மலேசியா மற்றும் துருக்கி நாடுகளுக்கு நிமிடத்திற்கு 3 ரூபாயாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரோமிங் திட்டம் 575 ரூபாயிலிருந்து தொடங்குகிறது, இதில் அன்லிமிடெட் கால்ஸ், SMS மற்றும் 250 GB டேட்டா ஒரு நாளுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல 2,198 ரூபாய்க்கும், 5,751 ரூபாய்க்கும் புதிய டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஜியோ.
No comments:
Post a Comment