Monday, May 14, 2018


திருப்பதி போறீங்களா? ஆதார் அட்டை போதும்... பெருமாளைப் பார்க்கிறது ரொம்ப ஈஸி!’
 
விகடன்




பள்ளி, கல்லூரிகளுக்கு இது கோடை விடுமுறை. அதனாலேயே பலரும் குடும்பம் குடும்பமாகப் பல சுற்றுலாத் தலங்களுக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கும் போய் வருகிறார்கள். அப்படிப் பலர் விரும்பிப் போகுமிடங்களில் திருப்பதியும் ஒன்று. ஆனாலும், அவசரப்பட்டுப் போய்விடுவார்களேயொழிய சுவாமி தரிசனம் செய்ய 18 மணி நேரம், 24 மணி நேரம் காத்திருக்க வேண்டும். அதற்கான பிரத்யேகக் கூண்டுகளில் அடைப்பட்டுக் கிடக்க வேண்டும். `ஏன்டா சுவாமியைக் கும்பிட வந்தோம்' எனப் பலரும் நம் காதுபட பேசக் கேட்டிருப்போம்.

ஆனால், அந்தச் சிரமம் இனி இல்லை. 'ஆதார் அட்டை', 'வாக்காளர் அடையாள அட்டை' இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு சென்றால் போதும். நீங்கள் சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நேரத்தைக் குறித்துத் தந்துவிடுவார்கள். குறிப்பிட்ட நேரத்தில் 'நாராயணகிரி கார்டன் நுழைவு வாயிலு'க்குச் சென்றால் போதும்... அதிகபட்சம் மூன்று மணி நேரத்தில் பெருமாளை தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிவிடலாம்.

இந்த இலவச சர்வ தரிசன டோக்கன் முறை கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. திருப்பதி ரயில் நிலையம் அருகிலுள்ள விஷ்ணு நிவாசம், கோவிந்தராஜ சுவாமிசத்திரம், ஸ்ரீனிவாசம் காம்ப்ளக்ஸ், ஆர்.டி.சி பஸ் ஸ்டாண்டு, அலிபிரி ஆகிய இடங்களில் இதற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன.

நமக்கான தரிசன நேரம் வரும்வரை, கீழ்த் திருப்பதியில் ஸ்ரீனிவாச மங்காபுரம், அலமேலு மங்காபுரம், கோவிந்தராஜ பெருமாள் கோயில் ஆகிய பகுதிகளுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வரலாம். மேல் திருப்பதியில் பாபநாசம், விஷ்ணுபாதம், ஜபாலி, ஆகாஷ் கங்கா ஆகிய பகுதிகளுக்குச் சென்று திருமலையின் முக்கிய இடங்களைப் பார்த்து வரலாம். அடையாள அட்டையைக் கொண்டு வராதவர்கள் வழக்கம்போல் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். இந்த வழிமுறையைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது.

No comments:

Post a Comment

HC orders govt to appoint 292 auxiliary nurses

HC orders govt to appoint 292 auxiliary nurses  TIMES NEWS NETWORK  6.11.2024  Bhopal/Jabalpur : In a significant judgement, a division benc...