Monday, May 14, 2018

தலப்பாகட்டி பிரியாணி வெற்றிக்கு பின்னால் இருக்கும் நாகசாமி.. 200 கோடி ரூபாய்க்கு அதிபதி..!

 Posted By: Prasanna VK Updated: Sunday, May 13, 2018, 16:24

l 8 வருடங்களுக்கு முன்பு பிரிட்டனில் ஒரு அலுவலகத்தில் வரவேற்பாளராக அதாவது receptionistஆக பணியாற்றி வந்த நாகசாமி தனபாலன் இன்று 200 கோடி ரூபாய் வர்த்தகத்தை செய்து வருகிறார். 35 வயதாகும் இவர் பிரிட்டனில் பணியாற்றிக் கொண்டு இருக்கும் போது, வெளிநாட்டில் சாதிப்பத்தை விட நமம் ஊரில் நம் மக்கள் முன் சாதிக்க வேண்டும் என வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு தாய் நாட்டுக்கு புறப்பட்டார். இப்போது துவங்கியது இந்த 200 கோடி ரூபாய் வர்த்தகத்தின் துவக்கம்.

2009ஆம் ஆண்டு.. 2009ஆம் ஆண்டு.. பல்வேறு சூழ்நிலைக்கு மத்தியில் நாகசாமியின் தந்தைக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டது, இதனால் 2009ஆம் பிரிட்டனில் தான் செய்துகொண்டு இருந்த வரவேற்பாளர் வேலையை விட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். திண்டுக்கல் திண்டுக்கல் தனது சொந்த ஊரான திண்டுக்கல் வந்த உடன் சில நாட்களில் நாகசாமி தனது தாத்தா நடத்தி வரும் பிரியாணி கடையை நிர்வகிக்க துவங்கினார். தற்போது இதன் பெயர் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி. 40 கடைகள் 40 கடைகள் இந்த சிறிய பிரியாணி கடையை நிர்வாகம் செய்த சில நாட்களிலேயே நாகசாமி தனபாலன் சென்னைக்கு தனது கிளையை விரிவாக்கம் செய்தார்,

 வெளிநாட்டு அனுபவம், படிப்பு ஆகியவை இவருக்கு பெரிய அளவில் உதவியது. இதன் காரணமாக இன்று உலகளவில் 40 கிளை கொண்டு இயங்கி வருகிறது திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி. 1957இல் துவக்கம்.. 1957இல் துவக்கம்.. 1957ஆம் ஆண்டல் நாகசாமியின் தாத்தா திண்டுக்கல் பகுதியில் ஆனந்த விலாஸ் என்ற சிறிய ஹோட்டலை நடத்தி வந்தார். இப்போது அக்கவுண்டட் ஆக இருந்த நாகசாமியின் மனைவி சமைத்த பிரியாணி தனிப்பட்ட சுவையாக இருந்தது. இந்த சுவை மக்களுக்கு மிகவும் பிடித்துப்போன காரணத்தால், திண்டுக்கல் பகுதியை சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்து ஆனந்த விலாஸ் கடையை தேடி வந்து சாப்பிட துவங்கினார்கள்.

இதுவே முக்கியமாக கொண்டு அடுத்தகட்ட திட்டத்தில் களமிறங்கினார் நாகசாமி. மக்கள் வரவேற்பு மக்கள் வரவேற்பு ஆனந்த விலாஸ் கடையில் பில் கவுன்டரில் எப்போது தலைப்பாகை கட்டிக்கொண்டு ஓருவர் பணத்தை வசூல் செய்வார், பிரியாணியின் சுவை மட்டுமல்லாமல் தலைப்பாகை மனிதரையும் மக்கள் கவனித்தனர். இதனால் ஆனந்த விலாஸ் பெயரை மறந்து மக்கள் தலைப்பாகட்டி பிரியாணி என அழைக்க துவங்கினர். கோயம்புத்தூர் கோயம்புத்தூர் 1957 முதல் 2009ஆம் ஆண்டு வரை தலைப்பாகட்டி பிராயாணி ஆன ஆனந்த விலாஸ் கடை ஒரேயொரு கிளையுடன் திண்டுக்கலில் மட்டும் இருந்து வந்த நிலையில், நாகசாமியின் சோதனை திட்டமாக கோயம்புத்தூரில் 2வது கிளை திறக்கப்பட்டது. ஆனால் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை.

விரிவாக்கம்
 இதன் பின் திண்டுக்கல் பகுதியிலேயே இன்னொரு கடையை திறக்கலாம் என கூறிய நாகசாமி, குடும்பம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. ஆனாலும் விடா முயற்சியுடன் பல தரப்பட்ட திட்டங்களை வகுத்தார் நாகசாமி. சென்னை விரிவாக்கம் சென்னை விரிவாக்கம் கோயம்புத்தூரில் தோல்வியை கண்ட நாகசாமி, பல குழப்பங்கள், பயத்தை கடந்து உறுதியான முடிவுடன், தனது தந்தைக்கு நம்பிக்கை அளித்து சென்னைக்கு திண்டுக்கல் தலைப்பாகட்டி பிராயாணியை கிளையை விரிவாக்கம் செய்தார். முதலீடு முதலீடு துவக்கத்திலேயே சென்னை அண்ணா நகர் பகுதியில் முதல் கிளையை அமைத்தார். நாகசாமி, இதற்கான முதலீட்டை தனது தந்தையுடன் சேர்த்து திரட்டினார்.

 வெற்றியின் ரகசியம்.. வெற்றியின் ரகசியம்.. கிளை விரிவாக்கம் துவக்கத்தில் இருந்தே நாகசாமி ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாக இருந்தார், பணத்தைவிடவும் வாடிக்கையாளர்களை சம்பாதிப்பதே முதல் நோக்கமாக கொண்டு இருந்தார் நாகசாமி. உதவி உதவி சென்னை வர்த்தகத்தை மேலும் விரிவாக்கம் செய்ய நாகசாமி தமிழ்நாட்டையே கலக்கும் இரண்டு ஹோட்டல் நிறுவன தலைவர்களின் உதவியை நாடினார். ஆம், சரவண பவன் மற்றும் அடையார் ஆனந்த பவன் நிறுவனங்களின் மூலம் சென்னை வர்த்தகம் மற்றும் கிளையை விரிவாக்கம் செய்தார் நாகசாமி. குடும்ப வர்த்தகம் குடும்ப வர்த்தகம் பொதுவாக தொழிற்துறை, தொழில்நுட்பம் மூலம் பல வகையில் வளர்ந்துள்ள மக்கள் மத்தியில் வர்த்தகம் செய்வது மிகவும் கடினம் தான். இக்காலக்கட்டத்தில் தந்தை வர்த்தகத்தை மகன் புதிய பாதையில் கொண்டு செல்வதில் பல சிக்கல்கள் உள்ளது. இப்படி அடுத்த தலைமுறையிடம் மாறிய வர்த்தகத்தில் 50 சதவீத வர்த்தகங்கள் மட்டுமே வெற்றி அடைந்துள்ளது. இதில் நாகசாமி வெற்றி அடைந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.


 மண் வாசனை இந்தியாவில் பல வகையான பிரியாணிகள் உண்டு லக்னாவி பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, கொல்கத்தா பிரியாணி என பல உள்ளது. இவை அனைத்திற்கும் ஒரு தனிப்பட்ட சுவை மற்றும் சிறப்பு உள்ளது. அதேபோல் தலப்பாகட்டி பிரியாணிக்கும் ஒரு தனிப்பட்ட சுவை இருக்கும், ஆதாவது நமம் ஊர் ருசி வட நாட்டு வாசம் இல்லாமல் தமிழ்நாட்டு சுவையை தொட்டு இருக்கும் தலப்பாகட்டி பிரியாணி. இதுவே மக்களை ஈர்க்க முக்கிய காரணமாக இருக்கிறது. வளர்ச்சியை நோக்கி பயணம் வளர்ச்சியை நோக்கி பயணம் சென்னை வர்த்தகம் வெற்றிப்பெற்ற நிலையில், அடுத்த கட்டத்திற்கு வர்த்தகத்தை நகர்த்த நாகசாமி தனது தாய்வழி மாமாக்களான சுப்பராஜ் ராமசாமி மற்றும் ரவி ஆகியோரை தனது வர்த்தகத்தில் சேர்த்துக்கொண்டார்

நாகசாமி. பிராண்டு போட்டி.. பிராண்டு போட்டி.. திண்டுக்கல் தலப்பாகட்டி வெற்றியை தொடர்ந்து இதற்கு போட்டியாக சென்னையில் தலப்பாகட்டு மற்றும் ராயல் தலப்பாகட்டு என பல பெயர்களின் உணவகங்கள் திறக்கப்பட்டது. பல பிரச்சனைகளுக்கு பின் தனது பிராண்டை மீட்டார் நாகசாமி. இதற்காக பல வழக்குகளையும் சந்தித்தார். இதன் பின் இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் தனது திண்டுக்கல் தலப்பாகட்டி பெயரை முறையாக பதிவு செய்தார். படிப்படியாக மாற்றங்கள் படிப்படியாக மாற்றங்கள் விரிவாக்கம் மற்றும் வெற்றியை தொடர்ந்து கிளையின் இன்டிரீயர் ஆகியவற்றையும் மாற்றி புதிய வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்த்தார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் திண்டுக்கலில் இருக்கு கடை பல ஆண்டு காலமாக குடிசையிலேயே இருந்தது அதனை தற்போதைய காலத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்தார் நாகசாமி.

பிரியாணி வகைகள் பிரியாணி வகைகள் மட்டன் பிரியாணிக்கு பெயர் போன் திண்டுக்கல் தலப்பாகட்டி தற்போது சிக்கன், பன்னீர், காளான் பிரியாணி என பல வகையான பிரியாணிகளை வழங்கி வருகிறது. இதேபோல் பல தரப்பட்ட தென் இந்திய உணவுகள் பார்பிக் உணவுகள் என பலவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. 40 கிளைகள் 40 கிளைகள் கடந்த 8 வருடத்தில் நாகசாமியின் நிர்வாகத்திற்கு கீழ் வெறும் 2 கிளையாக இருந்த ஆனந்த விலாஸ் தற்போது உலகளவில் சுமார் 40 கிளைகளாக விரிவாக்கம் அனைத்துள்ளது. இந்தியாவை தாண்டி தற்போது பாரீஸ், துபாய், கோலாலம்பூர் மற்றும் கலிபோர்னியா ஆகிய நாடுகளில் கிளையை அமைந்துள்ளது.

அடுத்தகட்டமாக சிட்னி, அபுதாபி, மஸ்கட் ஆகிய பகுதிகளில் கிளையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார் நாகசாமி. இந்தியாவில் அடுத்தக்கட்டமாக பெரிய நகரங்களை தாண்டி, 2வது மற்றும் 3ஆம் தர நகரங்களில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார் நாகசாமி. ஆன்லைன் வர்த்தகம் ஆன்லைன் வர்த்தகம் இந்த 8 வருடத்தில் நாகசாமி ஆன்லைன் வர்த்தகத்திலும் இறங்கியுள்ளார். சென்னையில் மட்டுமே ஆன்லைன் சேவை அளிக்கப்படும் நிலையில் இதில் மாதம் 1.5-2 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பெறுகிறது திண்டுக்கல் தலப்பாகட்டி. 200 கோடி ரூபாய் 200 கோடி ரூபாய் இன்றைய நிலையில், திண்டுக்கல் தலப்பாகட்டி நிறுவனத்தின் மொத்த மதிப்பு 200 கோடி ரூபாய். இதுவெறும் 8 வருடத்தில் நடந்த வளர்ச்சி என்பது தான் வியப்பாக உள்ளது. தமிழ் குட்ரிட்டன்ஸ் சார்பாக நாகசாமி தனபாலன் அவர்களுக்கு தொடர்ந்து வெற்றி பெற்ற வாழ்த்துக்கள். விடா முயற்சி விடா முயற்சி இந்த துறை, அந்த துறை என்று இல்லை. விடா முயற்சி மற்றும் சரியான திட்டமிடல் இருந்தால் போது அனைவரும் இதுப்போது வெற்றியை அடைய முடியும்.

Read more at: https://tamil.goodreturns.in/news/2017/07/23/nagasamy-owns-south-india-famous-biriyani-shop-worth-200-crore/articlecontent-pf38695-008475.html

No comments:

Post a Comment

HC orders govt to appoint 292 auxiliary nurses

HC orders govt to appoint 292 auxiliary nurses  TIMES NEWS NETWORK  6.11.2024  Bhopal/Jabalpur : In a significant judgement, a division benc...